2 – 3 மேட்ச்ல சொதப்புனா உடனே நீக்கீடுவாரு, முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பற்றி முன்னாள் வீரர் விமர்சனம்

RCB Faf Virat
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் 10 அணிகள் களமிறங்கியதால் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கடந்த வருடத்தை விட இருமடங்கு போட்டி காணப்பட்டது. அதில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்த மும்பையும் சென்னையில் தொடர் தோல்விகளால் முதல் 2 அணிகளாக வெளியேறிய நிலையில் லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு தேவையான வெற்றிகளைப் பெற்ற குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் காலம்காலமாக கோப்பைக்காக போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டது முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் வழிநடத்தி இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற போதிலும் அந்த அணி கோப்பையை வெல்ல முடியவில்லை. குறிப்பாக 2013 – 2021 வரை அதிக வருடங்கள் பேட்டிங்கில் மலைபோல ரன்களைக் குவித்து முழுமூச்சுடன் கேப்டனாக முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று போராடிய விராட் கோலி கடைசி வரை அந்த முயற்சியில் தோல்வியடைந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதால் கடந்த வருடம் பதவி விலகினார்.

- Advertisement -

சொதப்பல் விராட்:
பொதுவாக நிறைய பேட்ஸ்மேன்கள் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்ற பின் அதன் அழுத்தம் காரணமாக ரன்கள் குவிக்க தடுமாறுவார்கள். ஆனால் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் பேட்டிங்கில் இரு மடங்கு ரன்களைக் குவித்து ஒவ்வொரு வருடமும் அசத்தலாக செயல்பட்ட விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். ஆனாலும் ஒரு கேப்டனாக முக்கிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்தில் சொதப்பலான முடிவுகளை அவர் எடுத்தது தோல்விகளை பலமுறை பரிசளித்தது.

RCB

அதேபோல் ஒருசில போட்டிகளில் தோல்வி அடைந்தால் அந்தப் போட்டிகளில் சொதப்பும் வீரர்களுக்கு ஆதரவு அளிக்காமல் உடனடியாக நீக்கி விட்டு புதிய வீரர்களை சேர்ப்பதும் அவரின் கேப்டன்ஷிப் பொறுப்பில் ஒரு பின்னடைவை கொடுத்துக் கொண்டே இருந்தது. ஏனெனில் எப்போதுமே ஒரு வீரர் தனது அணியில் தங்களுக்கான இடம் பாதுகாப்பாக இல்லை என்று தெரிந்தால் அந்தப் பதற்றத்திலேயே சிறப்பாக செயல்பட முடியாமல் போய்விடும்.

- Advertisement -

மாற்றம், முன்னேற்றம்:
இருப்பினும் தற்போது கேப்டன்ஷிப் அவரின் கையிலிருந்து மாறியுள்ள நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டுப்லஸ்ஸிஸ் மற்றும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் பங்கர் ஆகியோர் வந்தபின் அந்த நிலைமை பெங்களூரு அணியில் மாறியுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். அதுவே இந்த சீசனில் பெங்களூருவின் வெற்றிக்கான ரகசியங்களில் ஒன்றாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

sehwag

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.”புதிய பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மற்றும் புதிய கேப்டன் ஆகியோர் பெங்களூருவின் சிந்தனையை மாற்றியுள்ளனர். கடந்த காலங்களில் 2 – 3 போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தவறினால் அந்த வீரர்களை விராட் கோலி நீக்கியதை பார்த்தோம். ஆனால் சஞ்சய் பங்கர் மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் ஆரம்பம் முதலே அனைத்து வீரர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வருகின்றனர். அதிலும் அனுஜ் ராவத் சுமாராக செயல்பட்டதால் அவருக்குப் பதில் ரஜத் படிடார் மாற்றியதை தவிர வேறு எந்தப் பெரிய மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை” என்று பாராட்டினார்.

- Advertisement -

வாய்ப்பிருக்கா:
கடந்த காலங்களில் முக்கிய நேரங்களில் பெங்களூரு அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்க தவறியதால் தோல்வி அடைந்ததை பலமுறை பார்த்தோம். ஆனால் இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கே டெல்லியை தோற்கடித்த மும்பை மாபெரும் உதவி செய்து அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. மேலும் கடந்த வருடங்களில் ஒருசில வீரர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் சிறப்பாக செயல்பட தவறியதும் தோல்விக்கு வித்திட்டது. ஆனால் இம்முறை நிறைய வீரர்கள் ஒரு அணியாகச் சேர்ந்து சிறப்பாக செயல்படுவதால் பெங்களூரு அணி சமமாக உள்ளதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கடைசி வரை சான்ஸ் கொடுக்கல ! ஐபிஎல் 2022 தொடரில் வாய்ப்பு பெறாத 4 தரமான இளம் வீரர்கள்

அதனால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடங்களில் விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகியோரைத் தவிர இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால் எதிரணி வெல்வதற்கு 90% வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இந்த முறை 4 பேருக்கு மேல் சிறப்பாக செயல்படுகின்றனர். பந்து வீச்சை நான் கணக்கில் கொள்ளவில்லை. தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் போன்ற அவர்களில் ஒவ்வொருவரும் வெற்றிக்கு பங்காற்றுகிறார்கள் என்பதால் இது பெங்களூருவின் வருடமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement