அக்டோபர் 23 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு. அதுபோன்ற உணர்வு எப்பொழுதுமே இருந்ததில்ல – விராட் கோலி நெகிழ்ச்சி

Virat-Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரினை இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் அந்தத் தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டி இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத போட்டியாக இருக்கலாம். ஏனெனில் அக்டோபர் 23-ஆம் தேதி சூப்பர் 12 சுற்றில் தங்களது முதல் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 159 ரகளை குவித்தது.

- Advertisement -

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய இந்திய அணியானது துவக்கத்திலேயே ராகுல், ரோகித், சூரியகுமார் யாதவ் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி எப்படி வெற்றி பெறப் போகிறது என்று அனைவரும் அஞ்சிய வேளையில் விராட் கோலி நங்கூரமாய் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு உத்திட்டார். அதே வேளையில் ஹார்டிக் பாண்டியாவும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்திற்கு ஏற்ப அவருக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

அந்த போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டபோது 19-ஆவது ஓவரில் ஹாரிஸ் ராஃப் வீசிய கடைசி இரண்டு பந்துகளை கோலி சிக்ஸருக்கு விளாசியதை யாராலும் மறக்க முடியாது. அதே வேளையில் கடைசி ஓவரின் போது முதல் பந்தில் பாண்டியா ஆட்டம் இழந்ததும் இந்தியாவின் கதை முடிந்தது என்று அனைவரும் நினைத்த வேளையில் கோலி அதனை மாற்றி எழுதி இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்திய அணி பெற்ற மிகப் பிரமாதமான வெற்றிகளிலும் ஒன்றாக அந்த போட்டி மாறியது. அதோடு கோலியின் கிரிக்கெட் கரியரிலும் அந்த போட்டி மிகவும் பிடித்தமான போட்டி என்று அந்த போட்டி முடிந்த உடனேயே அவர் பேசியிருந்தார். இந்நிலையில் அந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி முடிந்து ஒரு மாதம் மாத காலமான நிலையில் தற்போது விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் :

இதையும் படிங்க : வீடியோ : அச்சு அசல் தந்தையை போலவே அசத்தும் இளம் சந்தர்பால் – அறிமுக போட்டியிலேயே நாயகனாக சாதனை

அக்டோபர் 23 2022, என் மனதுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒரு நாளாக அமைந்துள்ளது. அன்று எனக்கு கிடைத்த ஒரு எனர்ஜி போன்று எப்பொழுதுமே கிரிக்கெட் கரியரில் எப்போதும் நான் உணர்ந்தது கிடையாது. அந்த ஒரு நாளை நான் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக உணர்கிறேன் என கோலி தனது புகைப்படத்தை பகிர்ந்து அந்தக் கருத்தினை நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement