நான் நினைத்தது வேறு இறுதியில் நடந்தது வேறு. சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு – கோலி மகிழ்ச்சி

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.

rcbvscsk

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன்பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே அடித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்களும், அறிமுக வீரர் ஜெகதீசன் 33 ரன்களையும் அடித்தனர்.

இதனால் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக கிரிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வானார்.

Kohli

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் எங்களுடைய முழுமையான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக கருதுகிறேன். இந்த போட்டியின் முதல் பாதியில் நாங்கள் நல்ல நிலைமையில் இல்லை. ஆனால் இரண்டாவது பாதியில் நல்ல நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். மேலும் இரண்டாவது டைம் அவுட்டின்போது 140 முதல் 150 ரன்கள் அடித்தால் நல்லது என்று கருதினேன். ஆனால் முடிவில் ரன்கள் கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இது வெற்றியை அப்படியே தொடர்ந்து கொண்டு செல்ல விரும்புகிறோம். இந்த போட்டியில் இறுதி வரை நின்று எப்படி அடிக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டோம். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினார். மோரிஸ் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement