- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கே அவங்க கூப்பிட்டு சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியும் – கேப்டன் பதவி நீக்கம் குறித்து பேசிய கோலி

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ் 18 வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணிக்கான வீரர்களின் பட்டியலும் பி.சி.சி.ஐ யின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது.

மேலும் அவருக்கு பதிலாக ஏற்கனவே டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் தான் விராட் கோலி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு கேட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகின. மேலும் அவர்கள் இருவருக்குமிடையே மோதல் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியாகியது.

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து வதந்திகளுக்கு எல்லாம் தற்போது இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி தனது விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மட்டுமே அணியின் தலைமையிடம் பேசியிருந்தேன்.

ஆனால் டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் தான் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் என்னை அழைத்து ஒருநாள் போட்டிகளில் இருந்தும் உங்களை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக கூறினார். மேலும் எனது கேப்டன் பதவி நீக்கம் குறித்து யாரும் என்னிடம் முன்கூட்டியே எதுவும் பேசவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித்துக்கும் எனக்கும் சண்டையா? 2 வருஷமா நான் இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன் – விராட் கோலி பளீர்

என்னுடைய கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிற்கு சென்றதால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அவர் ஒரு திறமையான வீரர் அவரின் தலைமையின் கீழ் தான் விளையாட ஒரு வீரராக தயாராக உள்ளேன். எனவே நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by