ரோஹித்துக்கும் எனக்கும் சண்டையா? 2 வருஷமா நான் இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன் – விராட் கோலி பளீர்

Kohli
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. வரும் 26ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடருக்காக நாளை இந்திய அணி மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Kohli

இந்நிலையில் ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டது பிடிக்கவில்லை என்பதால் ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருந்ததாக தகவல் வெளியாகியது. அதுதவிர கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து தற்போது விராட் கோலி தனது தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கோலி கூறுகையில் : பி.சி.சி.ஐ-யிடம் நான் எவ்வித ஓய்வும் கேட்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் விளையாட தயாராக உள்ளேன். எனக்கும் ரோஹித்துக்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.

Kohli

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இதற்கு விளக்கம் அளித்து ஓய்ந்து விட்டேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். ஏற்கனவே தேர்வு குழுவினரிடம் என்னுடைய விருப்பத்தை கூறிவிட்டேன். நான் அணிக்கு கேப்டனாக தொடரவில்லை என்றாலும் ஒரு வீரராக என்னுடைய முழு அர்ப்பணிப்பையும் நான் அணிக்காக வழங்க இருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பிற்கு நான் நேர்மையாக இருப்பேன் எனவும் விராட் கோலி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே உள்ள பிளவு உண்மைதான் – உறுதிப்படுத்திய அசாருதீன்

இதன் மூலம் ரோகித்துக்கும் விராட் கோலிக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் விராட் கோலி இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்பதும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement