விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே உள்ள பிளவு உண்மைதான் – உறுதிப்படுத்திய அசாருதீன்

Azharuddin
Advertisement

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் அந்த கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் கேப்டன் பதவியை பறித்து ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ வழங்கியது. இதன் காரணமாக 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவது உறுதியாகியுள்ளது.

Rohith

அதேபோன்று டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது விராட் கோலிக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது.

- Advertisement -

அவரது மகளின் பிறந்தநாளை காரணம் காட்டி இந்த தொடரில் இருந்து விலக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில் ரோகித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவும், ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியில் விராட் கோலியும் விளையாடாதது பல விமர்சனங்களை தற்போது கிளப்பி உள்ளது.

மேலும் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும், அவர்களுக்குள் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே உள்ள பிளவு உண்மைதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அசாருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில் : எந்தவொரு வடிவத்திலும் கோலி ஓய்வு எடுப்பதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

இதையும் படிங்க : இவரைப்போன்ற ஒரு வீரரை எப்படி அணியிலிருந்து ஒதுக்க முடியும் – தமிழக வீரருக்கு சப்போர்ட் செய்த கங்குலி

ஆனால் சரியான நேரத்தில் அந்த ஓய்வு எடுக்க வேண்டும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடையே இருக்கும் பிளவு குறித்த யூகங்கள் தற்போது அவர்களின் இந்த செயலின் மூலம் உறுதியாகி உள்ளது. இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட்டுக் கொடுக்காதவர்கள் என அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement