ஆர்.சி.பி ரசிகர்களை பத்தி சொல்லனும்னா இந்த ஒரு வார்த்தை போதும் – விராட் கோலி நெகிழ்ச்சி

Kohli
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள வேளையில் 17-வது ஐபிஎல் தொடரானது தற்போது இந்தியாவில் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்ற அணியாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர்.

அதேபோன்று கொல்கத்தா அணி இரண்டு முறையும், மற்ற அணிகள் ஒரு சில முறையும் கோப்பைகளை வென்றுள்ளன. ஆனால் இந்த 16 சீசன்களாக கோப்பையை கைப்பற்றாத அணியாக பெங்களூரு அணி திகழ்ந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்து பல்வேறு கேப்டன்கள் அந்த அணிக்காக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக விராட் கோலி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்நிலையில் தற்போது டூப்ளிசிஸ் தலைமையிலாவது கோப்பையை வெல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வருகிறது.

ஆனால் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி இந்த ஆண்டும் தற்போது வரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் ஏழு தோல்விகளுடன் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதன் காரணமாக இனிவரும் ஆறு போட்டியிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ரன் ரேட் இவர்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும்.

- Advertisement -

இல்லையெனில் இந்த முறையும் கோப்பையை நெருங்க முடியாது. அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை பெங்களூரு அணி எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக பார்க்கப்படும் விராட் கோலி (379 ரன்கள்) இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்.சி.பி ரசிகர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு எளிமையான பதில் ஒன்றினை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : 7 பேரால் முடியாது டிராவிட்.. 2024 டி20 உ.கோ வெல்ல இந்த டெம்ப்ளேட்டை யூஸ் பண்ணுங்க.. சித்து அட்வைஸ்

அப்படி விராட் கோலி கூறுகையில் : ஆர்.சி.பி ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் விசுவாசம் தான். எங்கள் அணியின் ரசிகர்கள் அளவு கடந்த ஆதரவு, அர்ப்பணிப்பு, அன்பிற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். எங்களது அணியில் எங்களின் ரசிகர்களும் ஒரு குடும்பத்தின் அங்கமாக உள்ளனர். உண்மையான விசுவாசம் இருக்கும் ரசிகர்கள் என்றால் அது ஆர்.சி.பி ரசிகர்கள் தான் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement