எல்லா அணிகளும் ஹோம் கிரவுண்டில் விளையாடாததும் ஒருவகையில் நல்லது தான் – சரியான கருத்தை கூறிய கோலி

Kohli-1
- Advertisement -

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசனுக்கான போட்டிகள் இன்று துவங்க உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெறுகிறது.

பொதுவாக ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் போது ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானமாக அதாவது ஹோம் கிரவுண்டில் 7 போட்டிகளில் விளையாடும். மீதமுள்ள போட்டிகளை எதிர் அணிகளின் மைதானத்தில் விளையாடும். ஆனால் இம்முறை எந்த ஒரு அணியும் உள்ளூர் மைதானத்தில் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. அனைத்து அணிகளும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடுகின்றனர்.

- Advertisement -

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இம்முறை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இங்கு போட்டிகள் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட உள்ளன. மேலும் இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த முதல் போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது :

Kohli

நாங்கள் விளையாடுவதை ரசிகர்கள் நேரில் பார்ப்பதை தவற விடுவார்கள் என்பது வருத்தமான உண்மைதான் அதனை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்து உள்ளது. மேலும் நேர்மறையான விஷயம் என்னவென்றால் உள்ளூரில் விளையாடும் சாதகம் இல்லாமல் இருப்பது அனைத்து அணிகளுக்கும் நல்லது. தான் ஏனெனில் உள்ளூர் மைதானங்களில் விளையாடும்போது அணிக்கு கூடுதல் பலம் இருக்கும்.

Kohli 1

ஆனால் இந்த முறை அப்படி கிடையாது. பொது மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது தான் அணியின் உண்மையான பலம் வெளிப்படும். கடந்த ஐபிஎல் போட்டி சிறப்பாக இருந்தது கடைசி மூன்று நான்கு போட்டிகள் வரை அனைத்து அணிகளும் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதை கணக்கிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அதே போன்றே இந்த தொடரும் சிறப்பாக அமையும் என தான் கருதுவதாக கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement