Virat Kohli : மொயின் அலி பேட்டிங் செய்ய வரும்போது என்னிடம் இதையே கூறினார். அதனாலே வெற்றி கிடைத்தது – கோலி பெருமிதம்

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Kohli-1
- Advertisement -

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

பிறகு 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Kohli 1

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பானது. ஏனெனில் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற மூத்த வீரர்கள் இல்லாதது பலவீனம்தான் இருப்பினும் டேல் ஸ்டெய்ன் சிறப்பாக பந்துவீசினார். அவரின் அனுபவம் இளம் வீரர்களுக்கும் உதவியது. இந்த போட்டியில் நான் 170-175 ரன்கள் வரை தான் குவிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால், மொயின் அலி சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்.

- Advertisement -

Moeen

அவர் களத்திற்கு வரும்போது நான் அடித்து ஆட போகிறேன் என்று என்னிடம் கூறியே அதிரடியா ஆட ஆரம்பித்தார். மைதானத்தில் உள்ள சிறிய பவுண்டரிகளை குறிவைத்த அவர் சிக்ஸர்களை தொடர்ந்து அடித்தார். அவர் ஆடிய விதம் ரன்கள் வர தொடங்கின. பிறகு என்மீது இருந்த அழுத்தம் குறைந்து நானும் எனது இயல்பான ஆட்டத்திற்கு மாறி ரன்களை குவிக்க ஆரம்பித்தேன்.

Rcb

அதனால் நான் சிறப்பாக விளையாடி சதமடித்தேன். எனவே இந்த வெற்றிக்கு காரணம் மொயின் அலி மற்றும் ஸ்டெய்ன் ஆகியோரே காரணம். மேலும், ரசல் விளையாடிய விதம் பிரமிப்பை உண்டாக்கியது என்றும் இதுபோன்ற ஆட்டங்களை போட்டிகளில் அவராலே விளையாட முடியும் என்றும் கோலி கூறினார்.

Advertisement