டெல்லி அணிக்கு எதிரான இந்த மோசமான தோல்விக்கு இவர்கள் இருவரே காரணம் – கோலி வேதனை

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 26 பந்துகளில் 53 ரன்களையும், ப்ரித்வி ஷா 42 ரன்களையும், பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் கோலி 43 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் தேர்வானார்.

dc

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராத் கோலி கூறுகையில் : போட்டியின் நடுவே எங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எதையும் நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் இந்த போட்டியில் எங்களது பந்து வீச்சு திட்டமிட்டபடி அமையவில்லை. டெல்லி அணியின் துவக்க வீரர்களான ப்ரித்வி ஷாவும் ஷிகர் தவானும் சிறப்பாக விளையாடினர்.

Stonis

மேலும் எங்களது திட்டங்களை அனைத்தையும் முடிக்கும்படி பற்றி ப்ரித்வி ஷாமிக அதிரடியாக விளையாடினார். அவரை எங்களது தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கிறேன். அதே நேரத்தில் இறுதி நேரத்தில் விளையாடிய ஸ்டாய்நிஸ் மிகுந்த அதிரடியாக விளையாடினார். அவர் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை நாங்கள் பிடிக்காமல் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது மிகவும் தவறு. அதனை சரியாக பயன்படுத்தி அவர் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார் என்று கோலி வேதனையுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement