சென்னை அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்விக்கு இந்த தவறே காரணம் – விராட் கோலி வருத்தம்

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி கோலி மற்றும் படிக்கல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் அதிரடியான துவக்கத்தை பெற்றாலும் பின்னால் வந்த வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

rcbvscsk

- Advertisement -

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் :

இந்த மைதானம் ஆட்டம் செல்ல செல்ல ஸ்லோ ஆனது. இந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் வரை நாங்கள் குறைவாக வைத்து விட்டோம் என்று நினைக்கிறோம். 175 ரன்கள் வரை வந்து இருந்தால் நிச்சயம் அது வெற்றிக்கான இலக்காக இருக்கும். அதே போன்று பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

csk

சென்னை அணி இரண்டாவது பாதியில் சிறப்பாக பந்து வீசியது. ஸ்லோ பால் மற்றும் யார்க்கர் என தொடர்ந்து எங்களை அவர்கள் ரன்கள் குவிக்கவிடாமல் தடுத்தார்கள். ஆனால் நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை.

siraj

அதுமட்டுமின்றி முதல் 5 6 ஓவர்களில் நாங்கள் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டோம். அடுத்தடுத்து இரண்டு தோல்விகள் வருத்தமளிக்கிறது. இருப்பினும் இதன் மூலம் மீண்டும் பலமாக திரும்ப நாங்கள் காத்திருக்கிறோம் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement