Virat Kohli : இவர்களின் ஆட்டமே இந்த சிறப்பான வெற்றிக்கு காரணம்- விராட் கோலி பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Kohli-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Ashwin 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.

இதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Divilliers

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : கடைசியாக நாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளோம். கிரிக்கெட்டினை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாட மட்டுமே நாங்கள் நினைத்து ஆடுகிறோம். டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டோனிஸ் ஆட்டமே வெற்றியை எங்களின் பக்கம் மாற்றியது. ஒரு கட்டத்தில் 175 ரன்கள் வரை மட்டுமே வரும் என்று நினைத்தேன். ஆனால், இறுதியில் 202 ரன்கள் வந்தது.

Stonis

நாங்கள் சிறந்த அணி. ஒரு டீமாக நல்ல கிரிக்கெட்டினை ஆடுவதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தோம் கடைசி கட்டத்தில் ஸ்டோனிஸ் சிறப்பாக வீசினார். தொடர்ந்து தோல்விகளை பெற்றுவருவது கஷ்டம் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்று கோலி கூறினார்.

Advertisement