- Advertisement -
ஐ.பி.எல்

3 – 4 நாட்களாக காய்ச்சல்.. இன்னும் 100 சதவீதம் பிட்டாகவில்லை.. தனது பிரச்சனை குறித்து – விவரட் கோலி வெளிப்படை

ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான விராட் கோலி நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இம்பேக்ட் வீரராக இரண்டாவதாக சேஸிங்கின் போது பேட்டிங் செய்திருந்தார். பொதுவாகவே மைதானத்தில் பீல்டிங் செய்ய மிகவும் விரும்பும் விராட் கோலி நேற்று இம்பேக்ட் வீரராக விளையாடியது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதற்கு காரணம் யாதெனில் :

லக்னோ அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு பேசிய : விராட் கோலி

கடந்த சில நாட்களாகவே அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் சரியான ஓய்வு தேவை என்பதற்காகவே நேற்றைய போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இம்பேக்ட் வீரராக விளையாடியிருந்தார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆர்.சி.பி அணி விளையாடுகையில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 34 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான துவக்கத்திற்கு பிறகு பெங்களூர் அணி 15 ஓவர்களில் எளிதாக இந்த சேஸிங்கை நிறைவு செய்து வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் தான் விளையாடியது குறித்தும், தன்னுடைய உடல் நலம் குறித்தும் பேசியிருந்த விராட் கோலி கூறியதாவது : கடந்த போட்டியை விட தற்போது நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் இன்னும் 100% முழு உடற்தகுதியை நான் எட்டவில்லை.

ஏனெனில் கடந்த மூன்று நான்கு நாட்களாகவே காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தேன். அதேபோன்று கடந்த போட்டியில் முழங்காலில் லேசான வலியும் இருந்தது. அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன். இன்றைய போட்டியினை நான் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. இறுதியில் எங்கள் அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

- Advertisement -

இதையும் படிங்க : 4 விக்கெட் எடுத்த இளம்வீரரை தாண்டி 1 விக்கெட் எடுத்த ஹேசல்வுட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கியது ஏன்?

தற்போது பேட்டிங்கில் எங்களது அணியின் பலம் மிகச் சிறப்பாக உள்ளது. பிலிப் சால்ட், ரஜத் பட்டிதார், டிம் டேவிட், ரோமாரியோ ஷெப்பர்டு என அதிரடியான வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். அதேபோன்று க்ருனால் பாண்டியாவுக்கு இன்னும் இந்த தொடரில் பெரியளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை அந்த அளவிற்கு எங்களுடைய அணி பலமாக உள்ளது என விராட் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -