INDvsBAN : இங்கு இப்படி விளையாடுனா தான் ஜெயிக்க முடியும். அதான் இந்த அதிரடி – ஆட்டநாயகன் கோலி பேட்டி

Virat-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று அடிலெயிடு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி 44 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 145 ஸ்ட்ரைக் ரேட் உடன் 64 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Virat Kohli IND vs BAN

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டு போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் அரைசதம் விளாசியிருந்த விராட் கோலி இன்றைய போட்டியிலும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை நின்று 64 ரன்கள் குவித்து இந்த தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை அடித்து அசத்தியிருந்தார். விராட் கோலி இந்த மூன்று ஆட்டங்களிலுமே இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது மிகச் சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : இது அணிகளுக்குமே மிக நெருக்கமான போட்டியாக அமைந்தது. இந்த போட்டி இறுதிவரை இவ்வளவு பரபரப்பாக செல்லும் என்று நான் நினைக்கவில்லை. இந்த போட்டியில் எனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். நான் மைதானத்தில் களமிறங்கும் போது எனக்கு சற்று பிரஷராகவே இருந்தது.

Virat-Kohli

அதனால் நான் எந்த ஒரு இடத்திலும் சிறிய தவறை கூட செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படியே சிறப்பாக விளையாடினேன். கடந்த காலங்களில் நடைபெற்ற எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்போது டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது அதற்காகத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து விளையாடினேன். ஆஸ்திரேலிய மைதானங்களை பொறுத்தவரை நல்ல கிரிக்கெட்டிங் ஷாட்டிற்கு மரியாதை இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடும் போது ப்ராப்பரான ஷாட்களை விளையாடினால் நம்மால் ரன்களை குவிக்க முடியும் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் இந்த ஆஸ்திரேலியா மைதானங்களில் தன்மையை அறிந்து தற்போது விளையாடி வருகிறேன். இந்த மைதானத்திலும் பந்தினை மதித்து பந்து வரும் அதே திசையில் நாம் பேட்டிங்கை செய்யும் பொழுது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் நான் மிகச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இந்திய வீரர்களுக்காக கையில் ப்ரஷுடன் ஓடி ஓடி வேலை செய்த ரகு, யார் இவர்? – என்ன காரணம்?

அதிலும் குறிப்பாக இந்த அடிலெயிடு ஓவல் மைதானம் எனக்கு தனிப்பட்ட வகையில் மிகப் பிடித்த மைதானம். இந்த மைதானத்தில் விளையாடும் போது நாம் நம்முடைய சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற ஒரு உணர்வு எனக்கு வரும். இந்த போட்டியை மிகவும் ரசித்து மகிழ்ச்சியுடன் விளையாடியதாக ஆட்டநாயகன் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement