இந்திய வீரர்களுக்காக கையில் ப்ரஷுடன் ஓடி ஓடி வேலை செய்த ரகு, யார் இவர்? – என்ன காரணம்?

Raghu-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் அரையிறுதி சுற்றிற்கான அணிகள் எவை என்பது தெரிந்துவிடும் என்கிற வேளையில் நேற்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி அடிலெயிடு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதனால் நேற்றைய போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக விராத் கோலி 64 ரன்களும், கே.எல் ராகுல் 50 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது முதல் ஏழு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் அடித்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக மீண்டும் சிறிது இடைவெளிக்கு பின்னர் போட்டி துவங்கியது.

அவ்வேளையில் ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட அந்த 16 ஓவர்களில் வங்கதேச அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மழைக்குப் பின்னர் இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஊழியர் ரகு மைதானத்தை சுற்றி கையில் ஒரு பிரஷோடு வளம் வந்து கொண்டிருந்தார்.

Raghu

அவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கவே அவர் யார்? என்ன செய்தார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்ச்சியில் பயிற்சி செய்யும் போது அவர்களுக்கு பந்து வீசும் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட்டாக பணியாற்றும் அவர் இந்திய அணியில் வேலை செய்து வருகிறார். அவரது பெயர் ரகு. இப்படி அவர் கையில் பிரஷ் வைத்து மைதானம் முழுவதும் ஓடி ஓடி இந்திய வீரர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தது.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் மழைக்குப் பிறகு மைதானம் சற்று ஈரப்பதத்துடன் இருந்ததால் வீரர்கள் வழுக்கி விழுவும் காயமடையும் அதிக வாய்ப்புகள் இருந்தது. மேலும் இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தும் ஷூக்களில் உள்ள ஆணிகள் மைதானத்தில் சற்று கிரிப்பாக அழுத்தம் கொடுக்கும் என்பதினால் மைதானத்தில் இருக்கும் புற்கள் மற்றும் மண் ஆகியவை ஷூ வில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு புற்களும், மண்ணும் ஷூவின் அடியில் பதிந்து இருந்தால் வீரர்கள் போதிய க்ரீப் இன்றி வழுக்கி விழுந்து காயமடையும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : IND vs BAN : இந்தியாவுக்கு எதிரா எப்போ ஆடுனாலும் இதுதான் நடக்குது – ஷாகிப் அல் ஹசன் வருத்தம்

எனவே அவ்வப்போது பவுண்டரி லைனில் வீரர்களின் காலில் உள்ள புற்கள் மற்றும் சேற்றை அந்த பிரஷ்ஷின் மூலம் ரகு அகற்றி கொண்டிருந்தார். டி20 உலகக் கோப்பை தொடர் இறுதி சுற்றினை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் வேளையில் முன்னெச்சரிக்கை காரணமாகவே வீரர்களுக்கு அவர் அந்த வேலையை பவுண்டரி லைனில் நின்று செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement