IND vs SL : விருதுலாம் முக்கியம் இல்ல. எனக்கு முக்கியம் இந்த ஒரு விஷயம் தான் – விராட் கோலி நெகிழ்ச்சி

Virat-Kohli-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு சதம் அடிக்காமல் தவித்து வந்த வேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து வங்கதேச அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்த விராட் கோலி தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

virat kohli 166

- Advertisement -

இப்படி அவர் விளையாடிய கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடித்துள்ள விராட் கோலி தற்போது மீண்டும் முரட்டு பார்முக்கு திரும்பி உள்ளதாக ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் என்ற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி 110 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் என இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 166 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். பின்னர் 391 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 73 ரன்களுக்கு சுருண்டுதால் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.

Virat Kohli 46

பின்னர் இந்த தொடர் குறித்தும் தனது பேட்டிங் குறித்தும் பேசிய விராட் கோலி கூறுகையில் : தொடர் நாயகன் விருது பற்றி எல்லாம் நான் யோசிப்பதே கிடையாது. என்னுடைய வேலை சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான். அதை மட்டுமே மனதில் வைத்து நல்ல இன்டன்டுடன் நான் விளையாடி வருகிறேன். அப்படி நான் விளையாடி இந்திய அணிக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக உள்ளது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நினைத்து நான் விளையாடுகையில் எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நேரம் பேட்டிங் செய்தால் நிச்சயம் ரன்கள் வரும். அந்த வகையில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் களத்தில் நின்று விளையாட ஆசைப்படுகிறேன். அந்த வகையில் தான் இந்த தொடர் முழுவதுமே நான் பேட்டிங் இறங்கும் போது நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று நினைத்தே விளையாடி வந்தேன்.

இதையும் படிங்க : IND vs SL : தோத்தத விட இந்த விஷயத்தை நெனச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – தசுன் ஷனகா வருத்தம்

அந்த வகையில் இந்த தொடர் எனக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. என்னுடைய பேட்டிங்கை நான் மிகவும் விரும்பி விளையாடி வருகிறேன். இப்படி சாதனைகளை படைக்க வேண்டும் என்றெல்லாம் நான் யோசிப்பது கிடையாது. மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள். அதேபோன்று எனது பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அது கூடுதல் மகிழ்ச்சி என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement