IND vs SL : தோத்தத விட இந்த விஷயத்தை நெனச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – தசுன் ஷனகா வருத்தம்

Shanaka
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியானது முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இலங்கை அணி பரிதாபமான தோல்வியை சந்தித்தது. இந்த ஒருநாள் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து தொடரை இழந்த இலங்கை அணியானது மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

INDvsSL

- Advertisement -

ஆனால் நேற்று திருவனந்தபுரம் நகரில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து 391 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற அசாத்திய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 22 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 73 ரன்களுக்கு சுருண்டது.

இதன் காரணமாக இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசியிருந்த இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

நாங்கள் இப்படி ஒரு போட்டியை விளையாடுவோம் என்று நினைக்கவே இல்லை. அந்த அளவிற்கு இது மோசமான தோல்வியாக எங்களுக்கு அமைந்துள்ளது. இதுபோன்று சில விடயங்கள் நடப்பது இயல்புதான். ஆனாலும் இந்த போட்டியில் இருந்து பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இதுபோன்ற மைதானத்தில் பந்துவீச்சில் எவ்வாறு செயல்பட வேண்டும், பேட்டிங்கில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். அதுமட்டும் இன்றி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது ஒரு இன்டன்டுடன் விளையாட வேண்டியது அவசியம். அந்த இன்டன்ட் இல்லாமல் போனால் இது போன்ற தோல்வியை சந்திக்க நேரிடும் என வருத்தத்தை தெரிவித்தார்.

இதையும் படிங்க : IND vs SL : இந்த இலங்கை தொடரில் நமக்கு கிடைத்த ஹீரோ இவர்தான் – ரோஹித் சர்மா புகழாரம்

அதன் பின்னர் தொடர்ந்து பேசிய தசுன் ஷனகா : இந்திய அணிக்கு வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இந்த அளவிற்கு அவர்கள் மிகத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரை கைப்பற்றியுள்ளார்கள் என்று இந்திய அணிக்கும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement