Virat Kohli : சிறப்பாகவே ஆடுகிறோம். ஆனால், தோல்வியே கிடைக்கிறது – காரணம் இதுதான் – கோலி

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமை

Kohli-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 31 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 75 ரன்களும், மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர்.

பிறகு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 40 ரன்களும், கடைசி நேரத்தில் பாண்டியா அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். மலிங்கா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Pandya 1

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கோலி கூறியதாவது : நாங்கள் கடைசி இரண்டு போட்டிகள் மிகவும் நன்றாக. விளையாடியதாகவே கருதுகிறோம். ஆனால், பந்துவீச்சாளர்கள் முதல் 6 ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க தவறி வருகின்றனர். இருப்பினும், மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை கடைசிவரை கொண்டு செல்கின்றனர். மொயின் அலி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.

Moeen ali

கடைசியில் இடதுகை பந்துவீச்சாளர் வீசினால் கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், பாண்டியா அடித்துவிட்டார். கடைசியாக விளையாடிய இராது போட்டிகளும் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் பதட்டமான சூழல்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று கோலி தெரிவித்தார்.

Advertisement