IND vs AUS : ராகுல் டிராவிட், டேவிட் வார்னரின் ஆல்-டைம் சாதனைகளை தகர்த்த கிங் கோலி – படைத்த சாதனைகள் இதோ

dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்த இந்தியா 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் சிறப்பான வெற்றி பெற்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186/7 ரன்கள் எடுத்தது.

Cameron-Green

அந்த அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 7, ஸ்டீவ் ஸ்மித் 6, கிளன் மேக்ஸ்வெல் 6 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 7 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (21) ரன்கள் குவித்தார். இறுதியில் டிம் டேவிட் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அதிரடியான 54 (27) ரன்களும் டேனியல் சாம்ஸ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (20) ரன்களும் குவித்தனர். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 187 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு மீண்டும் கேஎல் ராகுல் 1 (4) ரன்னிலும் கேப்டன் ரோகித் சர்மா 15 (17) ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

- Advertisement -

நிதானம் வெற்றி:
அதனால் 30/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்று தடுமாறிய இந்தியாவுக்கு 4வது ஓவரில் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் – விராட் கோலி ஆகியோர் 14வது ஓவர் வரை ஆஸ்திரேலிய பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் அரைசதம் அடித்து அதிரடியான 69 (36) ரன்களை விளாசி அவுட்டானார். அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அரை சதமடித்து 63 (48) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

Virat Kohli Suryakumar Yadav

இறுதியில் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25* (16) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்ததால் 19.5 ஓவரில் 187/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் நாங்கள் எப்போதுமே கில்லி என நிரூபித்து 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு அதிரடியாக 69 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

கிங் கோலியின் சாதனைகள்:
மறுபுறம் இந்த வாழ்வா சாவா போட்டியில் அனுபவத்தையும் நிதானத்தையும் காட்டிய விராட் கோலி அறிவிக்கப்படாத ஆட்ட நாயகனாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான இந்திய அணியிலும் இதே போல் ஏராளமான ரன்களைக் குவித்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கினார்.

Virat Kohli

1. அதனால் விமர்சித்த அதே முன்னாள் வீரர்கள் கைதட்டிப் பாராட்டிய நிலையில் தன்னுடைய சூப்பரான பார்மை தொடரும் அவர் இப்போட்டியில் குவித்த 63 ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் ஆல்-டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். கடந்த 2008இல் சர்வதேச பயணத்தை துவக்கிய அவர் 15 வருடங்கள் கழித்து தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் டிராவிட்டை முந்தி சச்சினுக்கு அடுத்தபடியாக ஜொலிக்கிறார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 34357
2. விராட் கோலி : 24078*
3. ராகுல் டிராவிட் : 24064
4. சௌரவ் கங்குலி : 18432
5. எம்எஸ் தோனி : 17092

- Advertisement -

2. அத்துடன் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8வது அரை சதத்தை அடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற டேவிட் வார்னரின் உலக சாதனையும் தகர்த்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 8*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
2. டேவிட் வார்னர் : 7, இலங்கைக்கு எதிராக

Viart Kohli 122

இதையும் படிங்க: IND vs AUS : இக்கட்டான வேளையில் பேட்டிங் செய்ய எனக்கு பிடிக்கும் – காரணத்தை கூறிய சூரியகுமார் யாதவ்

3. அது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்யும் போது 1500 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையும் அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 1536*
2. டேவிட் வார்னர் : 1195
3. ரோஹித் சர்மா : 1193
4. பாபர் அசாம் : 1080

Advertisement