முஸ்பிகர் ரஹீமை முந்திய இந்தியாவின் விராட் கோலி.. டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான உலக சாதனை

Virat Kohli and Rahim
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய வருகிறார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 21 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் 2வது போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 77 (49) ரன்கள் அடித்து பெங்களூரு முதல் வெற்றியை பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதே போல கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற3வது போட்டியிலும் துவக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரமாக விளையாடிய அவர் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 83* (59) ரன்கள் குவித்தார். ஆனால் கேப்டன் டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் பெங்களூரு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

கோலியின் உலக சாதனை:
அதை சேசிங் செய்த கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் 47, வெங்கடேஷ் ஐயர் 50, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* ரன்கள் அடித்து எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதன் காரணமாக தங்களுடைய சொந்த ஊரில் எம் சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா அணியிடம் தொடர்ந்து 9வது வருடமாக 6வது போட்டியில் பெங்களூரு பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

அதனால் விராட் கோலியின் போராட்டமும் வீணானது என்றே சொல்லலாம். இருப்பினும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்காகவும் பெங்களூரு அணிக்காகவும் விளையாடிய டி20 போட்டிகளில் இதுவரை விராட் கோலி மொத்தமாக 3276* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வங்கதேசத்தின் முஸ்பிகர் ரஹீம் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் வங்கதேசத்தில் உள்ள மிர்பூர் மைதானத்தில் முஸ்பிகர் ரஹீம் 3239 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். இதே சாதனை பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3036 ரன்கள் அடித்து 3வது இடம் பிடித்துள்ளார். அதே பட்டியலில் மிர்பூர் மைதானத்தில் 3020 ரன்கள் அடித்துள்ள மற்றொரு வங்கதேச வீரர் தமீம் இக்பால் 4வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: 2வது போட்டியிலேயே விராட் கோலியை மிஞ்சிய ஸ்டார்க்.. தூளாகும் கௌதம் கம்பீரின் 24.75 கோடி நம்பிக்கை

இது போக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 4 சிக்சர்கள் அடித்த விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய படைத்துள்ளார். இதுவரை விராட் கோலி பெங்களூரு அணிக்காக 241* சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு அதே பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெயில் 240 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement