16 யார்ட், சிமெண்ட் ஸ்லாப்.. ஃபார்முக்கு திரும்ப சஞ்சய் பங்கருடன் 3 ஸ்பெஷல் கோச்சிங் எடுத்த கோலி

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்சமயத்தில் சுமாராக ஃபார்மில் இருந்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அவர் சுமாராக விளையாடினார். அவருடைய சுமாரான ஆட்டத்தால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

முன்னதாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தொடர்ந்து தம்முடைய விக்கெட்டை பரிசளித்தது இந்திய ரசிகர்களையே வெறுப்படையை வைத்தது. அதனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டதாக ஒரு தரப்பு இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதன் காரணமாக தம்முடைய ஃபார்மை மீட்டெடுக்க விராட் கோலி 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிவெடுத்துள்ளார்.

- Advertisement -

ஸ்பெஷல் பயிற்சி:

அதற்காக அவர் ரயில்வேஸ் அணிக்கு எதிராக ஜனவரி 30ஆம் தேதி துவங்கும் ரஞ்சிக் கோப்பை போட்டியில் 2012க்குப்பின் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார். அதற்காக தமக்கு மிகவும் பிடித்த இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் சேர்ந்து அவர் ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டார். 2014 இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தற்போது போலவே தடுமாறியதை மறக்க முடியாது.

அப்போது 2014 – 2019 வரையிலான காலகட்டங்களில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் தான் விராட் கோலியின் பேட்டிங் தவறுகளை முன்னேற்றி சிறப்பாக விளையாட உதவினார். அதன் காரணமாக அவரிடம் மீண்டும் விராட் கோலி ஸ்பெஷல் பயிற்சிகளை எடுத்தார். அந்த பயிற்சியில் பேக் ஃபுட் ரைஸ் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காக சஞ்சய் பங்கர் 16 யார்ட் தூரத்திலிருந்து விராட் கோலிக்கு பந்துகளை வீசினார்.

- Advertisement -

சஞ்சய் பங்கர் பயிற்சி:

அப்படியே பேக் ஆஃப் லென்த் பந்துகளில் உள்ள பிரச்சனையை தவிர்ப்பதற்காக சிமென்ட் தரையில் விராட் கோலிக்கு எதிராக அவர் பந்து வீசி பயிற்சிகளை கொடுத்தார். இவை அனைத்தையும் விட கவர் ட்ரைவ் அடிக்க முயற்சிக்கும் விராட் கோலி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை பரிசளித்தார். அதை தவிர்ப்பதற்காக ஸ்கொயர் பகுதிகளில் ஷாட்டுகளை அடித்து விராட் கோலி பயிற்சிகளை எடுத்தார்.

இதையும் படிங்க: முகமது அஷாருதீன் அன்று என்னிடம் சொன்னதை திலக் வர்மா.. இன்று நிஜமாக்கிட்டாரு.. பசித் அலி பாராட்டு

இந்தப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டுள்ள விராட் கோலி டெல்லி வீரர்களுடன் சேர்ந்து வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பை போட்டியில் அவர் அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம். அந்தப் போட்டி தலைநகர் டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement