இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜனவரி 28ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் 166 ரன்களை துரத்திய இந்தியா 78-6 என தடுமாறியது. இருப்பினும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா நேரம் செல்ல செல்ல சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடினார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் 72* (55) ரன்கள் அடித்த அவர் ஃபினிஷிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
அசாருதீன் கணிப்பு:
அதையும் சேர்த்து கடைசி 4 போட்டிகளில் அவர் அவுட்டே ஆகாமல் 318* ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 அவுட்டுக்கு மத்தியில் அவுட்டே ஆகாமல் 300+ ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனை தாம் பேட்டி எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார்.
அப்போது தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த திலக் வர்மா வருங்காலங்களில் அசத்துவார் அவரை நீங்கள் கவனித்துப் பாருங்கள் என்று அசாருதீன் தம்மிடம் சொன்னதாக பசித் அலி தெரிவித்துள்ளார். அதை திலக் வர்மா இன்று உண்மையாக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி பசித் அலி தனது யூடியூப் பேசியது பின்வருமாறு. “முகமது அசாருதீனை எனது யூடியூப் பக்கத்தில் பேட்டி எடுத்த போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடியிருந்த திலக் வர்மா பெயரை அவர் பேசினார்”
பசித் அலி பாராட்டு:
“எங்கள் ஊரில் திலக் வர்மா என்ற பையன் இருக்கிறார். அவர் விளையாடுவதை பாருங்கள் என்று அசாருதீன் சொன்னார். இன்று அது உண்மையாக மாறியுள்ளது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் கௌதம் கம்பீர் இடது வலது கை பேட்ஸ்மேன்களை நன்றாக பயன்படுத்தினார். திலக் நன்றாக விளையாடினார். அது என்ன ஒரு போட்டி” எனக் கூறினார்.
இதையும் படிங்க: விராட், ரோஹித் ரெடின்னா அவங்களோட தடுமாற்றத்தை சரி செய்ய நான் ரெடி.. புதிய பேட்டிங் கோச் கோட்டக்
அந்த வகையில் டி20 அணியில் சுரேஷ் ரெய்னா போல திலக் வர்மா இடது கை பேட்ஸ்மேனாக அசத்தி வருகிறார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வென்று இந்தத் தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்ற இந்திய அணியினர் தயாராக உள்ளனர். அந்தப் போட்டியிலும் திலக் வர்மா உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்க தயாராக உள்ளார்கள்.



