விராட், ரோஹித் ரெடின்னா அவங்களோட தடுமாற்றத்தை சரி செய்ய நான் ரெடி.. புதிய பேட்டிங் கோச் கோட்டக்

Sittanshu Kotak 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்சமயத்தில் சுமாராக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் இருவருமே சுமாராக விளையாடினார்கள். அதனால் அந்த 2 தொடர்களிலும் தோல்வியை சந்தித்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெறலாம் என்று ஒரு தரப்பு இந்திய ரசிகர்களே விமர்சித்தார்கள். அந்த விமர்சனத்தால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய ரோகித் சர்மா ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் கூட அடிக்கவில்லை. அந்த வகையில் 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவருடைய கம்பேக் சுமாராகவே அமைந்தது.

- Advertisement -

கோலி, ரோஹித்துக்கு பயிற்சி:

அடுத்ததாக விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு பேட்டிங்கில் முன்னேறும் பயிற்சியை கொடுக்க தாம் தயாராக இருப்பதாக இந்திய அணியும் புதிய பேட்டிங் பயிற்சியாளர் சிட்டான்சு கோட்டக் தெரிவித்துள்ளார். ஆனால் நட்சத்திர வீரர்களான அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படி இருந்தால் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது அவர்களுக்கு பயிற்சியளிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கும் கோட்டக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் மிகவும் சீனியர் வீரர்கள். ஆனால் இப்போதுள்ள வீரர்களுக்கு கூட விளையாட்டை எப்படி புரிந்து கொள்கிறார்கள், எப்படி சிந்திக்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது உதவ முடியுமா? என்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது எங்களுடைய வேலையாகும்”

- Advertisement -

நான் ரெடி:

“அந்த வகையில் அவர்களுக்கு என்னால் 2 – 5% உதவினால் கூட அது சிறந்த விஷயமாக இருக்கும். இதுவரை விளையாடிய அனுபவத்தை வைத்து விராட், ரோஹித் இன்னும் நிறைய கற்க வேண்டும் என்று சொல்வது நியாயமற்றதாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஏதேனும் உள்ளீடுகளை என்னிடமிருந்து பெற வேண்டிய மனநிலை வரலாம்”

இதையும் படிங்க: 200 ரன்ஸ் அடிக்கிற மேட்ச்ல சுயநலமா.. ஒவ்வொரு மேட்ச்லயும் சூர்யகுமாரிடம் எதிர்பாக்க முடியாது.. கோட்டக் பேட்டி

“அது போன்ற நிலைமை வரும் போது அவர்களிடம் சில பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எனது மனதில் இருக்கிறது. ஆனால் அதற்கு சரியான நேரம் வர வேண்டும். அவர்கள் அப்படி உணர்ந்தால் இருக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக அபிஷேக் நாயர், கெளதம் கம்பீர் பயிற்சியில் அவர்கள் சிறப்பாக விளையாடாததாலேயே இவர் பேட்டிங் துறைக்கு ஸ்பெஷல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement