இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜனவரி 28ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். கடந்த சில வருடங்களாக எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கிய அவர் பெரிய ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இருப்பினும் கேப்டனாக வந்தது முதல் பேட்டிங்கில் அவர் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி வருகிறார்.
சுயநலமற்ற ஆட்டம்:
அதன் காரணமாக தற்சமயத்தில் ஐசிசி டி20 டாப் 10 பேட்டிங் தரவரிசையில் அவர் நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்நிலையில் சுயநலமின்றி அடித்து நொறுக்க வேண்டிய டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது என இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் சிட்டான்சு கோட்டக் தெரிவித்துள்ளார். எனவே சூரியகுமார் விரைவில் அசத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி கோட்டக் பற்றி பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் நன்றாகவே செயல்பட்டு வருகிறார். ஆனால் சில நேரங்களில் அவரிடம் நாம் நிறைய எதிர்பார்ப்பதாக நான் கருதுகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சூர்யா அசத்துவார் என்று எதிர்பார்ப்பது சரியும் அல்ல. டி20 என்பது தற்போது ஆக்ரோஷமாக வந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் அனைவரும் அதிரடியாக விளையாடும் நோக்கத்தை கொண்டுள்ளார்கள்”
சீக்கிரம் அசத்துவாரு:
“வருங்காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவுட்டாவதை பயமின்றி விளையாடுவதாக கருதும் காலம் வரும். ஏனெனில் 200 – 225 ரன்கள் படிக்க விரும்பும் நீங்கள் உங்களுடைய விக்கெட்டை பாதுகாப்பதற்காக விளையாட முடியாது. மிகவும் சுயநலமற்ற கிரிக்கெட்டின் பிராண்டை விளையாடும் சூரியகுமார் மற்ற பேட்ஸ்மேன்களிடம் அப்படியே விளையாடுமாறு சொல்கிறார்”
இதையும் படிங்க: தோனி மாதிரி ஃபினிஷிங் திறமை கொண்ட பாண்டியா.. இந்த அவமானத்தை சிரிப்புடன் ஏத்துகிட்டாரு.. சஞ்சய் பங்கர்
“சூரியகுமார் போகிற போக்கில் தன்னுடைய பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஆட்டத்தில் எதையும் மாற்றுமாறு நான் சொல்லத் தேவையில்லை. எதிரணியும் அவரை டார்கெட் செய்வதற்காக திட்டங்களுடன் வருகிறார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர்களுடைய திட்டத்தை படித்து அதற்கு தகுந்தார் போல் விளையாட அவர் பயிற்சிகளை எடுத்து வருகிறார். எனவே இந்தப் போட்டியில் கூட அவர் ரன்கள் அடிக்கக்கூடும்” என்று கூறினார்.



