தோனி மாதிரி ஃபினிஷிங் திறமை கொண்ட பாண்டியா.. இந்த அவமானத்தை சிரிப்புடன் ஏத்துகிட்டாரு.. சஞ்சய் பங்கர்

Sanjay Bangar
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரில் சூரியகுமார் தலைமையில் முதல் 2 போட்டிகளில் வந்த இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னதாக 2022 ஐபிஎல் கோப்பையை குஜராத் அணிக்காக கேப்டனாக வென்ற ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியையும் வழி நடத்தினார்.

குறிப்பாக ரோஹித் இல்லாத போது கேப்டனாக செயல்பட்ட அவருடைய தலைமையில் இந்திய அணி வெற்றிகளும் பெற்றது. மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக விளையாடிய பாண்டியா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதற்கிடையே ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை நீக்கிய மும்பை பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

அவமானத்தில் சிரிப்பால்:

அதன் காரணமாக ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பின் பாண்டியா இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக வந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இல்லை என்று சொல்லி சூரியகுமாரை புதிய கேப்டனாக நியமித்தார். அது போக ஹர்திக் பாண்டியாவிடம் இருந்த துணை கேப்டன்சிப் பதவியையும் பறித்த பிசிசிஐ சுப்மன் கில்லிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அவமானப்படுத்தியது.

இந்நிலையில் அந்த அவமானத்தை எல்லாம் ஹர்திக் பாண்டியா சிரிப்புடன் ஏற்றுக் கொண்டதாக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பாராட்டியுள்ளார். மேலும் தோனி போல ஃபினிஷிங் செய்யும் திறமையும் பாண்டியாவிடம் இருப்பதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “50 ஓவர் போட்டிகளில் பாண்டியா கிட்டத்தட்ட தோனி போல ஃபினிஷிங் செய்யும் வேலையில் செயல்படுகிறார்”

- Advertisement -

தோனி போல:

“தோனி பொதுவாக போட்டியை மிகவும் ஆழமாக எடுத்துச் செல்வார். அவருடைய தாக்கம் பாண்டியாவிடம் அதிகமாக தெரிகிறது. 49, 50வது ஓவர் வரை போட்டிகளை எடுத்துச் சென்று அவர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அதே சமயம் 30-4 என அணி சரிவை சந்திக்கும் போது ஒரு நாளைக்கு தகுந்தார் போல் விளையாடும் திறமையும் அவரிடம் இருப்பது சிறப்பானது”

இதையும் படிங்க: 2024இல் ஜொலித்த ஸ்மிரிதி மந்தனா.. ஐசிசி விருதில் எந்த ஆசிய வீராங்கனைகளும் செய்யாத சாதனை

“அனைத்தையும் ஒருவர் சிரிப்புடன் ஏற்றுக்கொள்ள பெரிய இதயம் வேண்டும். அந்த வகையில் கேப்டன்ஷிப் பொறுப்பை சூரியகுமாரிடம் அவர் கொடுத்தது பாராட்டத்தக்கது. ஒவ்வொரு வீரர்களிடமும் ஆழத்தில் வளர்வதற்கான நோக்கம் இருக்கும். எனவே வருங்காலத்தில் பாண்டியா மீண்டும் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தும் வாய்ப்பு பெறுவார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement