IND vs ENG : சுமாரான பேட்டிங்கால் 6 வருடத்துக்கு பின் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்த விராட் கோலி – ரிஷப் பண்ட் அபார வளர்ச்சி

RIshbah Pant Virat Kohli
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் 3 நாட்களில் அபாரமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 412 ரன்கள் எடுத்த போதிலும் 2-வது இன்னிங்சில் சொதப்பி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஆனால் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் கொதித்தெழுந்து வெறித்தனமாக நிர்ணயிக்கப்பட்ட 378 ரன்களை அசால்டாக சேsiங் செய்து வரலாற்று வெற்றியை சுவைத்தது. அதனால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில் 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது. இப்போட்டியில் கில், விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஷார்துல் தாகூர் போன்றவர்கள் 2 இன்னிங்சிலும் சொதப்பியதால் டிரா கூட செய்ய முடியாமல் இந்தியா தோல்வியடைந்தது.

சொதப்பிய கோலி:
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய விராட் கோலி 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவை கைவிட்டார். கடந்த வருடம் முதல் 4 போட்டிகளில் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழிநடத்தி முன்னிலையை பெற்று கொடுத்த அவர் இம்முறை பேட்டிங்கில் சொதப்பி தாம் பெற்றுக் கொடுத்த வெற்றியை தானே வீணடிக்கும் வகையில் செயல்பட்டார். ஜாம்பவான் சச்சினுக்கு பின் கடந்த பல வருடங்களாக அவரைப்போலவே ரன் மெஷினாக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார்.

kohli

ஏற்கனவே 70 சதங்களை அடித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று தன்னை நிரூபித்துள்ள அவர் கடந்த 2019க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களாக 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக 3 முறை கோல்டன் டக் அவுட்டான அவரை 2 – 3 மாதங்கள் பிரேக் எடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த அவர் தொடர்ச்சியாக விளையாடி வரும் போதிலும் எந்த மாற்றமும் முன்னேற்றமும் அடையவில்லை.

- Advertisement -

மெகா சரிவு:
இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அதிலிருந்து படிப்படியாக விலகி கடந்த ஜனவரியில் இருந்து சாதாரண வீரராக சுதந்திர பறவையாக விளையாடி வரும் போதிலும் அவரால் பழைய பன்னீர்செல்வாமாக மாறமுடியவில்லை. ஒரு காலத்தில் ஏராளமான ரன்கள், சதங்கள், சாதனைகளை படைத்து 3 வகையான கிரிக்கெட்டிலும் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்டிருந்த உலகின் ஒரே பேட்ஸ்மேனாக எதிரணிகளை தெறிக்கவிட்ட அவரை கிங் கோலி என்று அனைவரும் போற்றினர்.

Kohli

இருப்பினும் 2019க்கு பின் அவரின் கேரியரில் ஏற்பட்டுள்ள மெகா வீழ்ச்சி அவர் தன் வசம் வைத்திருந்த பெருமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஐசிசி புதிதாக வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுகான பட்டியலில் 6 வருடங்களுக்கு பின் முதல் முறையாக விராட் கோலி டாப்-10 பட்டியலுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஆம் கடந்த 2015 முதல் பெரும்பாலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த அவர் சமீப காலங்களில் முதலிடத்தை இழந்தாலும் குறைந்தது டாப்-10 பட்டியலுக்குள் இருந்தார். ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் மொத்தமாக சொதப்பிய அவர் 6 வருடங்களுக்குப் பின் 2053 நாட்களுக்கு பின் முதல் முறையாக டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு 13-வது இடத்தை பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மேலும் வேதனையாக அமைந்துள்ளது.

Rishabh-Pant-and-Ravindra-Jadeja

பண்ட் முன்னேற்றம்:
இருப்பினும் 146, 57 என 2 இன்னிங்சிலும் அட்டகாசமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்காக போராடிய ரிஷப் பண்ட் தனது வாழ்வில் முதல் முறையாக டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார். இப்போட்டியில் பங்கேற்காத கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தொடரில் மிரட்டிய ஜோ ரூட் தொடர்ந்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்க அவருடன் அசத்திய ஜானி பேர்ஸ்டோ 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : 450 அடிச்சிருந்தாலும் நாங்க செய்ஞ்சிருப்போம், இது ஆரம்பமே – உலகையே எச்சரிக்கும் இங்கிலாந்து கேப்டன்

பந்துவீச்சில் இப்போட்டியில் பெஞ்சில் அமர்ந்திருந்த அஸ்வின் 2-வது இடத்திலும் 5 விக்கெட்டுகளை எடுத்து கேப்டனாக போராடிய ஜஸ்பிரித் பும்ரா 3-வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் 104 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார். 2-வது இடத்தில் அஸ்வின் உள்ளார்.

Advertisement