ரசீத்தின் அபார சுழலில் சிக்கி கிளீன் போல்ட் ஆன கோலி..! – வீடியோ உள்ளே

adil
Advertisement

கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்த தொடரில் கோலி சிறப்பாக விளையாடி வந்தாலும் அவர் அனைத்து போட்டிகளிலும் சூழல் பந்து வீச்சாளர்களிடமே தனது விக்கெட்டை பறிகொடுத்து வந்தார்.
rashid
இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் ஆதில் ரஷீத் வீசிய பந்தை தவறவிட்டு 8 வருடத்திற்கு பின்னர் ஸ்டம்பிங் மூலம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மெயின் அலி வீசிய பந்தில் தனது விக்கெட்டை எல் பி மூலம் பறிகொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த கோலி, தனது சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சாளரிடமே தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் கோலி.


இந்த போட்டியில் 71 ரன்களை எடுத்திருந்த போது ஆதில் ரஷீத் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தகளத்தில் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Advertisement