அம்மாவின் பிறந்தநாள் அன்று அவருடைய புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி – இவங்க தான் அவரோட அம்மாவா?

Kohli
Advertisement

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சுற்றி கடந்த சில நாட்களாகவே சர்ச்சையான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் எதையும் கவனத்தில் கொள்ளாமல் தனது ஆட்டத்தில் மட்டும் அவர் கவனமாக இருந்து வருகிறார். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள கோலி இரண்டாவது போட்டியில் முதுகுவலி காரணமாக இடம்பெறாமல் வெளியில் அமர்ந்துள்ளார்.

Kohli

இருப்பினும் அடுத்த மூன்றாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜனவரி 6-ஆம் தேதி தனது அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள விராட்கோலி “ஹாப்பி பர்த்டே மா” என்று அவரது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அம்ரிஸ்டர் நகரில் இருக்கும் பொற்கோவிலில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் தனது தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவருடைய அம்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் விராட் கோலியின் ரசிகர்களும் தங்களது பங்கிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அவர் பதிவிட்ட இந்த புகைப்படமானது சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரல் ஆனது. அதுமட்டுமின்றி அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை முதுகுவலி காரணமாக விராட் கோலி தவறவிட்டார்.

இதையும் படிங்க : டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்ட கே.எல் ராகுல் – எத்தனையாவது இடம் தெரியுமா?

இருப்பினும் அடுத்த போட்டியில் நிச்சயம் இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்த விராட் கோலி அவருடைய மகளின் முதலாவது பிறந்த நாளையும் இன்னும் சில தினங்களில் கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement