டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்ட கே.எல் ராகுல் – எத்தனையாவது இடம் தெரியுமா?

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டியாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

rahul 1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டனான கே.எல் ராகுல் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்து உள்ளார். அது குறித்த தகவலை நாம் இந்த பதிவில் காண இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்த ராகுலுக்கு தற்போது அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது என்றே கூறலாம்.

ஏனெனில் அடுத்தடுத்து இந்திய அணியில் வாய்ப்பினைப் பெற்ற ராகுல் தற்போது டெஸ்ட் அணியின் முதன்மை தொடக்க வீரராக இடம்பிடித்தது மட்டுமின்றி துணை கேப்டனாகவும் இந்த தொடரில் செயல்பட இருந்தார். தற்போது கேப்டன் விராத் கோலியும் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாட முடியாமல் போக இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

rahul 1

இந்நிலையில் இந்த தொடரின் செஞ்சூரியன் போட்டியின்போது முதல் இன்னிங்சில் 123 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ராகுல் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 18 இடங்கள் முன்னேறி தற்போது 31 வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ச்சியாக ராகுல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் டாப் 10-க்குள் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சின்ன பையனா நீங்க. அவரோட போயி சண்டை போடுறீங்க – பும்ராவிற்கு அட்வைஸ் செய்த டேல் ஸ்டெயின்

அதே வேளையில் முதல் போட்டியின்போது தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தெ.ஆ வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி 8 விக்கெட்டை வீழ்த்தி இருந்ததால் தற்போது அவர் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறி 30-தாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement