சின்ன பையனா நீங்க. அவரோட போயி சண்டை போடுறீங்க – பும்ராவிற்கு அட்வைஸ் செய்த டேல் ஸ்டெயின்

Steyn
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் மோதும்போது எப்போதுமே வீரர்களுடன் நேரடியாக வார்த்தை போரில் ஈடுபடும். அதே போன்று தற்போது இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மற்ற தென் ஆப்பிரிக்க வீரர்களுடன் நேரடியாக களத்தில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

bumrah

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங் செய்யும்போது தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மார்கோ யான்சனுக்கு எதிராக வார்த்தை மோதலில் ஈடுபட்டார். அவர்கள் இருவரும் கடுமையாக பேசிக்கொள்ளவே அம்பயர் அவர்களை பிரித்து விட்டார்.

பும்ரா பேட்டிங் செய்யும் போது தொடர்ச்சியாக யான்சன் அவருக்கு ஷார்ட் பாலாக போட்டுக் கொண்டே இருந்ததார். அதனால் கடுப்பான பும்ரா நேரடியாக அவரிடம் சென்று வார்த்தைகளை உதித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட அம்பயர் இருவரையும் பிரித்து அனுப்பி அனுப்பி வைத்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினை அளித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கூறுகையில் :

bumrah

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இதுபோன்று களத்தில் பும்ரா வேகப்பந்துவீச்சாளர் உடன் சண்டையிடுவது முதல்முறை கிடையாது. ஏற்கனவே அவர் இதேபோன்று சண்டையிட்டு உள்ளார் அதுவும் சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்றத இங்கிலாந்து தொடரின்போது ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இதேபோன்றுதான் வாக்குவாதம் செய்தார். அதே போன்றே தற்போதும் செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஏன் தம்பி உங்களால சும்மா இருக்க முடியாதா? ரிஷப் பண்டை வெளுத்து வாங்கிய – கவுதம் கம்பீர்

இந்த விஷயத்தில் நான் பும்ராவிடம் ஒரு விஷயத்தை மட்டுமே கூற விரும்புகிறேன். நீங்கள் என்ன சிறு குழந்தையா? கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு திருப்பிக் கிடைக்கும் என்று ஸ்டெயின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement