ஏன் தம்பி உங்களால சும்மா இருக்க முடியாதா? ரிஷப் பண்டை வெளுத்து வாங்கிய – கவுதம் கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களை குவிக்க, தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது துவக்கத்தில் சறுக்கலை சந்தித்தாலும் மிடில் ஆர்டரில் இம்முறை புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் நல்ல நிலைமைக்கு வந்தது. ஒரு கட்டத்தில் புஜாரா 53, ரஹானே 58 ரன்களும் குவிக்க இந்திய அணியானது நல்ல ரன் குவிப்பை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pujara

- Advertisement -

ஆனால் அவருக்கு அடுத்து வந்த ரிஷப் பண்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் காரணமாக இந்திய அணியால் இறுதியில் 266 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட் இந்த 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய உடனே தென்னாப்பிரிக்கா வீரர் வென்டெர்டுசைன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது ஆவேசத்தால் விக்கெட்டை இழந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறுகையில் : ஒரு போட்டியில் யாரை வேண்டுமானாலும் எளிதாக ஸ்லெட்ஜிங் செய்து விடலாம். ஆனால் உங்கள் கையில் பேட் இருக்கும் போது எதிரணியை கையாள்வது என்பது மிகக் கடினமான ஒன்று. இக்கட்டான வேளையில் அணி இப்படி இருக்கும்போது தேவை இல்லாமல் சண்டை போட்டு ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து அதை நான் விரும்பவில்லை. அவர் தனது பொறுப்பை உணர்ந்து பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும்.

pant 1

என்னை பொருத்தவரை பண்ட் செய்தது தைரியமான ஒரு செயல் கிடையாது. முட்டாள் தனமான ஒன்று அவரது இந்த செயலால் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளேன். இந்த போட்டியில் அவர் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் நிறைய உள்ளது. பொறுமையை கையாண்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் நமக்கு சக்சஸ் கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : 4 ஆம் நாள் போட்டி துவங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம். காரணம் இதுதான் – தப்பிக்குமா இந்தியா?

அதை தவிர்த்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் மிகவும் மோசமான விடயம் என்றும், இது போன்ற விடயங்களை அவர் இனி வரும் காலங்களில் செய்யக்கூடாது என்றும் கம்பீர் கூறினார். மேலும் இந்த தவறுகளில் இருந்து அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது என்றும் கூறினார்.

Advertisement