இந்திய அணி தற்போது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
As long as we look within, we won't need to seek anything outside. ???? pic.twitter.com/CvUVElZwjm
— Virat Kohli (@imVkohli) September 5, 2019
அந்த புகைப்படத்தில் பேண்ட், ஷர்ட் இன்றி வெற்று உடம்பில் போஸ் கொடுத்திருக்கிறார். இது ஒரு விளம்பரப் படத்திற்காக அல்லது போட்டோ ஷூட் காக எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு நாம் நம்மைப் பற்றி வெளியில் தேடுவதைவிட நமக்குள் நாம் யாரென்று புரிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற வரிகளை பதிவிட்டு அந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட இந்தி ரசிகர்கள் விராட்கோலியின் இந்த பதிவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.