நான் சைவம் தான் சாப்பிடுறேன். ஆனா அவ்வப்போது அதையும் சாப்பிடுறேன் – பிட்னஸ் குறித்து விராட் கோலி பகிர்வு

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் உடற்பகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக் காக்க வேண்டும் என்பதற்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் சற்று கூடுதல் எடையுடன் காணப்பட்ட விராட் கோலி தனது கூடுதல் எடை காரணமாக ஆட்டத்திறன் குறைவதை கவனித்து அதன் பின்னர் கட்டுக்கோப்பான உணவு முறைகளை பின்பற்றி அதோடு உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து பிட்டான கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார்.

Virat Kohli 1

- Advertisement -

அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாகவே மிகச்சிறந்த ஃபிட்னஸ் உடன் திகழும் விராட் கோலி கிரிக்கெட் விளையாடினாலும் சரி, ஓய்வில் இருந்தாலும் சரி உடற்பயிற்சியை மட்டும் தவறாமல் செய்து வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு அடுத்து ஓய்வில் இருக்கும் விராட் கோலி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவானது தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகு அளவில் ஈர்த்துள்ளது. மேலும் அந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர் ஒருவர் அளித்த கமெண்டிற்கு கோலி பதில் அளித்ததுள்ளது தற்போது இணையத்தில் அதிகளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் விராட் கோலி பதிவிட்ட அந்த உடற்பயிற்சி வீடியோவின் கீழ் ஒரு கருத்தினை பதிவிட்ட ரசிகர் : நல்ல உடல் அமைப்பு மற்றும் தசைகள் இருக்க இறைச்சி சாப்பிடுவது அவசியம் என்று பலர் கூறுகிறார்கள் என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் அதற்கு பதில் அளித்த விராட் கோலி இதெல்லாம் மிகப்பெரிய கட்டுக்கதை என்று கூறியுள்ளார்.

kohli diet 1

இதன் மூலம் விராட் கோலி சைவ உணவுகளை மட்டுமே தான் உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு உடலில் ஏற்பட்ட சில அசவுகரியங்கள் காரணமாக இறைச்சியை தவிர்த்த விராட் கோலி அப்போது தெரிவித்ததாவது : எனக்கு முதுகுத்தண்டில் உள்ள பிரச்சனை காரணமாக சில அசவுகரியங்களை நான் உணர்ந்தேன். அதன் காரணமாக 2018ம் ஆண்டிலிருந்து இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு அவர் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பகிர்ந்த அவர் : நிறைய காய்கறிகள், இரண்டு கப் காபி, நிறைய கீரைகள் மற்றும் தோசைகள் போன்றவற்றை உண்பதாக தெரிவித்திருந்தார். இப்படி முழுவதுமாக சைவ உணவுகளையே உட்கொள்ளும் விராட் கோலி அவ்வப்போது அசைவ உணவான முட்டைகளையும் எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : INDvsNZ : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச அணி இதோ

இதன் மூலம் நல்ல உடற்கட்டு இருக்க அசைவம் இருந்தால் தான் கிடைக்கும் என்று பலர் கூறிவரும் வேளையில் சைவம் சாப்பிட்டாலும் நல்ல முறையில் உடலை பராமரிக்க முடியும் என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement