டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக விராட் கோலி படைக்கவிருக்கும் சாதனை – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 115 போட்டிகளில் விளையாடி 4008 ரன்களை குவித்துள்ளார். இதில் 37 அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும். அதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள இவர் 52 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

மேலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி 237 போட்டிகளில் விளையாடி 7263 ரன்களை குவித்துள்ளார். இதில் ஏழு சதங்களும், 50 அரை சதங்களும் அடங்கும்.

- Advertisement -

இப்படி டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி எதிர்வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இதுவரை ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் விராத் கோலி இந்திய அளவில் அதிக ரன்களை குவித்த வீரராக முதல் இடத்திலும் இருக்கிறார். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மேலும் 35 ரன்கள் குவித்தால் முதல் இந்திய வீரராக 12,000 டி20 ரன்களை அடித்த வீரராக சாதனை படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

இதுவரை 374 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி அதில் 357 போட்டிகளில் பேட்டிங் செய்து 11965 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை குவித்த வீரராக கிரிஸ் கெயில் 14562 ரன்களுடன் முதலிடத்திலும், சோயிப் மாலிக் 12993 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : நமக்கு நேரமே இல்ல.. எல்லாத்துக்கும் ரெடியா இருங்க.. இந்திய வீரர்களை அறிவுறுத்திய டிராவிட்

அவர்களை தொடர்ந்து கைரன் பொல்லார்டு 12,390 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் தற்போது விராட் கோலி நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாகியுள்ள கோலி எஞ்சியுள்ள கடைசி 2 ஆட்டங்களில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement