IND vs AUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பாண்டிங், சச்சினை மிஞ்சி விராட் கோலி படைக்க உள்ள 2 அசத்தல் சாதனைகள் இதோ

Virat Kohli Ricky Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்ற அசத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 17ஆம் தேதி மும்பையில் துவங்குகிறது. இத்தொடரை வென்று டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியாவும் தயாராகியுள்ளது.

Virat Kohli 75

ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட முதன்மை நட்சத்திர வீரர்கள் விளையாடும் இத்தொடரில் நம்பிக்கை நாயகன் விராட் கோலியும் களமிறங்குவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த 15 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் மிகச் சிறப்பாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த அத்தனை கதைகளையும் நிறுத்தி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

காத்திருக்கும் சாதனைகள்:
குறிப்பாக 2022 ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய அவர் சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் அதற்குள் 3 சதங்களை அடித்து விட்டார். மேலும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் 186 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்து மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள அவர் இத்தொடரில் எவ்வித அழுத்தமுமின்றி சுதந்திரமாக விளையாடுவார் என்பது எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன் பொதுவாகவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படுவதன் காரணத்தாலேயே ஏற்கனவே அதிவேகமாக 10000 ரன்களை விளாசியுள்ள அடித்துள்ள அவர் அதற்குள் 43 சதங்களை அசால்டாக அடித்துள்ளார். அந்த வகையில் பொதுவாகவே களமிறங்கும் அனைத்து போட்டிகளிலும் ஏதேனும் சாதனைகளை படைப்பதை வழக்கமாக வைத்துள்ள அவர் இந்த தொடரில் 191 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 13000 ரன்களை அடிக்கும் 5வது வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் (18426), குமார் சங்ககாரா (14234), ரிக்கி பாண்டிங் (13704), சனாத் ஜெயசூர்யா (13430) ஆகியோருக்கு பின் படைப்பார்.

- Advertisement -

அதை விட தற்போது 262 இன்னிங்ஸ் 12809* ரன்களை எடுத்துள்ள அவர் இந்த தொடரில் 191 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைப்பார். இதற்கு முன் சச்சின் 321 இன்னிங்ஸில் 13,000 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அத்துடன் இந்த தொடரில் இன்னும் 46 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்து விராட் கோலி புதிய சாதனை படைப்பார்.

Ponting

சொல்லப்போனால் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியிலேயே இந்த சாதனையை அவர் படைப்பதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 6976 (164 போட்டிகள், இந்திய மண்ணில்)
2. ரிக்கி பாண்டிங் : 5406 (153 போட்டிகள், ஆஸ்திரேலிய மண்ணில்)
3. விராட் கோலி : 5358* (107 போட்டிகள், இந்திய மண்ணில்)

இதையும் படிங்க: IND vs AUS : ரோஹித் சர்மாவிற்கு பதிலாக நாளைய போட்டியில் துவக்க வீரராக – இறங்கப்போவது யார்?

அது போக இதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் தற்போதுள்ள ஃபார்முக்கு இந்த தொடரின் 3 போட்டிகளிலும் 3 சதங்களை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்வார். இதுவரை அவர் 46 சதங்கள் எடுத்துள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement