IND vs AUS : ரோஹித் சர்மாவிற்கு பதிலாக நாளைய போட்டியில் துவக்க வீரராக – இறங்கப்போவது யார்?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்துள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மார்ச் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடாததன் காரணமாக ஹார்டிக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தனது குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதின் காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து நடைபெற இருக்கும் எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலாவது ஒருநாள் போட்டியில் மட்டும் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ishan Kishan 1

இந்நிலையில் ரோகித் சர்மா இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக துவக்க வீரருக்கான இடத்தில் களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாளைய முதலாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் துவக்கவீரராக களமிறங்கும் வேளையில் அவருடன் இஷான் கிஷன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் கடைசி போட்டியில் காயம் காரணமாக ரோஹித் விலகியபோது அந்த போட்டியில் இடம் பிடித்த இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : 90 ரன்களில் சேவாக் மாதிரி சிக்ஸருடன் சதமடிக்கும் அவர்கிட்ட அரிதான 2 திறமை இருக்கு – இளம் இந்திய வீரரை பாராட்டும் மஞ்ரேக்கர்

எனவே அவரே ரோகித் சர்மாவின் இடத்தில் களமிறங்குவார் என்றும் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளைய முதலாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷனே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement