- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மீண்டும் விஜய் ஹசாரே கோப்பையில் களமிறங்கும் விராட் கோலி.. இந்திய அணிக்கு வரும் முன் அதிரடி முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா பல வருடங்கள் கழித்து 2025 விஜய் ஹசாரே கோப்பையில் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார்கள். அதில் சிக்கிமுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சதமடித்து 155 ரன்களை குவித்த ரோஹித் சர்மா மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் உத்தரகாண்டுக்கு எதிரான 2வது போட்டியில் டக் அவுட்டானார்.

மறுபுறம் 12 வருடங்கள் கழித்து விஜய் ஹசாரே கோப்பையில் களமிறங்கிய விராட் கோலி ஆந்திராவுக்கு எதிரானப் போட்டியில் சதமடித்து 131 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றியில் பங்காற்றினார். அடுத்து விளையாடிய குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக 77 (61) ரன்களை வெளுத்த அவர் டெல்லி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினர். அத்துடன் விராட், ரோஹித் விஜய் ஹசாரே கோப்பையிலிருந்து விலகினார்கள்.

- Advertisement -

மீண்டும் டெல்லிக்காக கிங் கோலி

அடுத்ததாக 2026 புத்தாண்டில் அவர்கள் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்கள். இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பையில் விராட் கோலி மீண்டும் ஒரு போட்டியில் விளையாட வர உள்ளதாக டெல்லி வாரியத்தின் வாரியத்தின் தலைவர் ரோகன் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“3 போட்டிகளில் விளையாட உள்ளது பற்றி விராட் கோலி எங்களை தொடர்பு கொண்டார். எனவே தற்சமயத்தில் அவர் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்காக விளையாட உள்ளார். நாங்கள் அதை நம்புகிறோம்” என்று கூறினார். இதிலிருந்து ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்கு வரும் முன்:

தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லண்டன் சென்றுள்ள விராட் கோலி தன்னுடைய உபகரணங்கள் பையை டெல்லி அணியின் ஹோட்டல் அறையில் விட்டுச் சென்றுள்ளார். அதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பெங்களூரு திரும்பும் அவர் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லிக்காக களமிறங்க உள்ளார். அதை முடித்துக்கொண்டு ஜனவரி 8ஆம் தேதி அவர் இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

இதையும் படிங்க: 2 நாளில் முடிந்த மெல்போர்ன் டெஸ்ட்.. ஆஸிக்கு கொட்டு வைத்து தண்டனையை அறிவித்த ஐசிசி

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்க உள்ளது. எனவே குறித்த நேரத்தில் அவர் இந்திய அணியுடன் இணைந்து நியூசிலாந்து தொடருக்காக பயிற்சிகளை எடுப்பார். மறுபுறம் ரோஹித் சர்மா ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் முதல் 2 போட்டிகளுடன் விஜய் ஹசாரே கோப்பையிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -