சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டிராவிடை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை படைத்த கிங் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டியும் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

kohli

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான பேட்ஸ்மேனான விராட் கோலி புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச அரங்கில் ரன் மெஷின் என்று பாராட்டப்படும் இவர் 418 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அதிவேகமாக 22,000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் விளையாடியது மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய அவர் இந்திய வீரர்களான சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். மேலும் அதேபோல 22 ஆயிரம் ரன்களைக் குவித்த சங்கக்காரா, ஜெயவர்த்தனே, பாண்டிங், கல்லிஸ் மற்றும் லாரா போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் 34 ஆயிரத்து 357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement