சச்சின், பாண்டிங், லாராவை முந்தி புதிய உச்சம் தொட்ட விராட் கோலி – 33 வயதிலேயே இப்படி ஒரு சாதனையா?

kohli
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று முன்தினம் அறிவித்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சலசலப்பு ஏற்படுத்தினார். கடந்த 2014 முதல் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வந்த அவர் 2017 முதல் 3 வகையான கேப்டன் பொறுப்பையும் வகித்தார். அவர் தலைமையில் இந்தியா ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாத காரணத்தால் விமர்சனங்களுக்கு உள்ளான அவர் முதலில் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதை சாதகமாக பயன்படுத்திய பிசிசிஐ அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பறித்தது.

kohli

- Advertisement -

மொத்தமாக முழுக்கு:
இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 வெற்றிகளை குவித்து இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள போதிலும் 33 வயதிலேயே அந்தப் பதவிக்கு முழுக்கு போட்டுள்ளார். அவர் தலைமையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை இந்தியா குவித்தது. இப்படி ஒரு மகத்தான கேப்டனாக இருந்த விராட் கோலி கடைசியாக கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவிற்கு தலைமை தாங்கியிருந்தார்.

500 இன்னிங்ஸ்:
முன்னதாக கடந்த வாரம் கேப்டவுன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3வது போட்டியின் 2 இன்னிங்சுகளிலும் பேட்டிங் செய்த விராட் கோலி முறையே 79 மற்றும் 29 ஆகிய முக்கியமான ரன்களை எடுத்த போதிலும் இந்தியா தோல்வி அடைந்தது. இருப்பினும் அந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் விளையாடிய விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்தியாவிற்காக 500 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து முடித்துள்ளார்.

kohli 1

இதன் வாயிலாக இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் 500 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த 4வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்தியாவுக்காக 500 இன்னிங்ஸ்களில் விளையாடிய வீரர்கள் இதோ:

- Advertisement -

1. சச்சின் டெண்டுல்கர் : 782 இன்னிங்ஸ்
2. ராகுல் டிராவிட் : 605 இன்னிங்ஸ்
3. எம்எஸ் தோனி : 526 இன்னிங்ஸ்
4. விராட் கோலி : 500* இன்னிங்ஸ்
5. சௌரவ் கங்குலி : 488 இன்னிங்ஸ்

kohli

இதில் ஆச்சரியப்படும் ஒரு அம்சம் என்னவெனில் விராட் கோலி விளையாடிய 500 இன்னிங்ஸ்களில் மிகச்சரியாக 250 இன்னிங்ஸ்களில் சாதாரண வீரராகவும் 250 இன்னிங்ஸ்களில் கேப்டனாகவும் விளையாடியுள்ளார்.

- Advertisement -

சச்சினை முந்தி மாஸ்:
அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் 500 இன்னிங்ஸ்களுக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்திய விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 500 இன்னிங்ஸ்களுக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் இதோ:

kohli century

விராட் கோலி : 23358* ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் : 22214 ரன்கள்
ரிக்கி பாண்டிங் : 21458 ரன்கள்
பிரையன் லாரா : 21451 ரன்கள்

- Advertisement -

100 சதங்கள் சாதனை:
சச்சின் டெண்டுல்கருக்கு பின் கிரிக்கெட்டில் ஒரு ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி ஏற்கனவே மழைபோல ரன்களை பொழிந்து பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது வெறும் 33 வயதிலேயே 500 இன்னிங்ஸ்களுக்குப் பின் சச்சின் டெண்டுல்கர் அடித்த ரன்களை விட அதிகமாக விளாசியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி ஓய்வு பெறும் முடிவை முதலில் யாரிடம் சொன்னார் தெரியுமா! – பின்னணியில் நடந்தது என்ன?

ஏற்கனவே 70 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ள இவர் குறைந்தது இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அப்படி விளையாடும் பட்சத்தில் “சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையான 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிக்க பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினால் மிகையாகாது.

Advertisement