6 ஆவது முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விராட் கோலி நிகழ்த்திய அசாத்திய சாதனை – விவரம் இதோ

Virat Kohli
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாடியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 92 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அது வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி 20 ஓவர்களின் முடிவில் 254 ரன்களை குவித்தது.

6 ஆவது முறையாக விராட் கோலி நிகழ்த்திய சாதனை :

இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக விளையாடிய நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி 25 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 43 ரன்கள் குவித்து ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் இந்த போட்டியில் பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றாலும் ஒரு முக்கிய சாதனை ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் மூலம் விராட் கோலி நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்று அவர் அடித்த இந்த 43 ரன்களின் மூலம் இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அவர் 600 ரன்களை எட்டியுள்ளார்.

இதன்மூலம் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 600 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை அதிகமுறை குவித்த வீரராக விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் 600+ ரன்களை ஆறு முறை அடிக்காத வேளையில் நேற்றைய போட்டியில் அடித்த 600 ரன்களோடு சேர்த்து விராட் கோலி இதுவரை ஆறு முறை ஐபிஎல் போட்டிகளில் 600 ரன்களை கடந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே, மும்பை, குஜராத் அணிகளுக்கு அடுத்து 4 ஆவது அணியாக ஆர்.சி.பி அணி – நிகழ்த்திய சாதனை

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி நிச்சயம் இந்த ஆண்டும் ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement