டி20 கிரிக்கெட்டில் 5 ஆவது பேட்ஸ்மேனாக மிகப்பெரிய சாதனையை படைத்த – விராட் கோலி

Kohli
- Advertisement -

மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஓவரில் பவுண்டரி அடித்த விராட் கோலி அதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 4-வது ஓவரின் 3-வது பந்தில் லெக் சைடில் பிரமாண்டமான சிக்சர் ஒன்றினை அடித்து அசத்தினார்.

kohli 2

- Advertisement -

அதற்கு முந்தைய பந்தில் பவுண்டரி அடித்து 10 ஆயிரம் ரன்களை கடந்தார். 312 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை 4 வீரர்கள் கடந்துள்ளனர். அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 14275 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

பொல்லார்ட் 11195 ரன்களுடனும், சோயப் மாலிக் 10808 ரன்களுடனும், வார்னர் 10019 ரன்களுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி அடித்த 51 ரன்கள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 10004 ரன்கள் எடுத்துள்ளார். நேற்றைய போட்டியில் 42 பந்துகளை சந்தித்த விராட் கோலி 51 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.

kohli 3

இந்த ஐந்து வீரர்களை தொடர்ந்து தற்போது ரோஹித் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது.

பின்னர் அடுத்ததாக விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே குவித்து 54 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் தற்போது பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement