Virat Kohli : அஸ்வினை அசிங்கப்படுத்தி எல்லை மீறிய கேப்டன் கோலி – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Kohli
- Advertisement -

நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 202 ரன்களை குவித்தது. இந்த இலக்கினை எதிர்த்து ஆடிய பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் சிக்ஸர் அடித்தார். அந்த சிக்ஸர் கோலியின் தலைக்கு மேல் சென்றது. அடுத்த பந்தையும் அதேபோன்று அஸ்வின் அடிக்க அதனை கோலி கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின் கோலி அஸ்வினை நோக்கி என்ன அடிக்குற ? என்னை தாண்டி அடிச்சிட முடியுமா ? என்பதுபோல் சைகை செய்தார். இதோ அந்த வீடியோ :

கோலியின் இந்த செயல் எல்லை மீறி இருந்தது. விக்கெட் விழுந்தால் கொண்டாடுவது வழக்கம் தான். ஆனால், கோலியின் இந்த வரம்பு மீறிய செயல் ரசிகர்களை சற்று முகம் சுளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.

இதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement