107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி ..!2வது டெஸ்ட் போட்டியிலும் தடுமாற்றம்!

2test

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக 2ஆம் நாள் துவங்கப்பட்டது டாஸ் வென்று பீலடிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை 107 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ராகுல் முறையே (0,8)என்ற ரன்களில் ஆட்டம் இழந்தனர்.எனவே அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தை அளித்தது.

mr

அதற்கடுத்து வந்த புஜாரா மற்றும் கிங் கோலி அணியை சரிவிலிருந்து மீட்ப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஜோடியும் அணிக்கு அதிர்ச்சியையே அளித்தது. 25பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 1 ரன் எடுத்த நிலையில் கோலியின் தவறான அழைப்புக்கு ஓடி வந்து ரன்அவுட் ஆனார்.இதனால் இந்திய அணி 15 ரன்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து பரிதவித்தது.அதன் பின் ரஹானே கோலியுடன் இணைந்தார்.

இந்த ஜோடியும் அதிக நேரம் நீடிக்க வில்லை கோலி 23 ரன்கள் எடுத்துஇருந்த நிலையில் வோக்ஸ் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இதன்பின் விக்கட்டுகள் மலமல என சரிந்தன. முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸை 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு முடித்துக்கொண்டது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சிலே தடுமாறுவதை காணமுடிகிறது.

james

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கட்டுகளை சாய்த்தார்.அதன்பிறகு 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்க உள்ள நிலையில் இந்திய அணியினை போல் இங்கிலாந்து அணி தடுமாறுமா இல்லை இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் 3ஆம் நாள் ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.