Virat Kohli : கோலியின் கேப்டன் பதவிக்கு வந்த ஆப்பு. காரணம் – இதுதான்

RCB2019
- Advertisement -

இந்தியாவில் தற்போது 12 ஆவது ஆண்டாக ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ipl cup

இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடர்ச்சியான தோல்விக்கு விராட் கோலியின் கேப்டன்சியே காரணம் என்று பலரும் கூறிவருகின்றனர். ஏற்கனவே 2017 மாற்றும் 2018 ஆம் ஆண்டு கோலி தலைமையிலான பெங்களூரு அணி மோசமாக விளையாடி பிளேஅப்-க்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக டிவில்லியர்ஸை கேப்டனாக மாற்றினால் பெங்களூரு அணி இந்த தொடர் தோல்வியில் இருந்து மீளுமா ? என்று பெங்களூரு அணியின் நிர்வாகம் யோசனை செய்து வருகிறது. இருப்பினும், பெங்களூரு அணியில் கோலி, டிவில்லியர்ஸ் தவிர சொல்லிக்கொள்ளும்படி பேட்ஸ்மேன்கள் இல்லை.

Abrcb

மேலும், பந்துவீச்சாளர்களும் படுமோசமாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மட்டுமின்றி கடந்த சில தொடர்களாகவே விராட் கோலி தலைமையிலான அணி சோபிக்க தவறி வருகிறது. இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக திகழ்வது வீரர்களின் தேர்வு என்றும் ஒரு பேச்சு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement