பாபர் அசாமின் கருத்துக்கு பதிலளித்த விராட் கோலி. வைரலாகும் ட்வீட் – என்ன சொல்லிருக்காரு பாருங்க

Azam
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் தவித்து வருவதால் மோசமான பேட்டிங் காரணமாக பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். அதோடு தனக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறும் அவர் மீது தற்போது ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அதிலும் ஒரு சிலர் விராட் கோலி இனி சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடுவதை தவிர்த்து சிறிது ஓய்விலிருந்து மீண்டும் திரும்ப வர வேண்டும் என்றெல்லாம் பேச தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு ஆதரவாக தற்போதைய கிரிக்கெட்டில் சில வீரர்கள் தங்களது குரல்களை கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரும், அந்த அணியின் கேப்டனுமான பாபர் அசாம் விராட் கோலி போன்ற ஒரு மாபெரும் வீரர் நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவார் என்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தலை சிறந்து விளங்கும் அவர் இதுபோன்ற சூழ்நிலைகளை கடந்து மிகவும் வலிமையாக திரும்ப வருவார் என்று தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இதனை அடுத்து பாபர் அசாம் பகிர்ந்த அந்த கருத்து இணையத்தில் வைரலாகியது. மேலும் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்தது உலக அளவிலும் பேசுபொருளாக மாறியது. சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வரும் பாபர் அசாம் தற்போது கோலியை ஆதரித்து அவர் வெளியிட்ட அந்த டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

- Advertisement -

இந்நிலையில் பாபர் அசாம் பதிவிட்ட அந்த ட்விட்டர் பதிவுக்கு தற்போது பதில் அளித்துள்ள விராட் கோலி நன்றி தொடர்ந்து மிளிருங்கள். வளருங்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்து என பதிவிட்டு இருக்கிறார். பாபர் அசாமின் பதிவிற்கு பதில் அளித்த விராட் கோலியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விராட் கோலியிடமிருந்து இனிமே தான் இந்த விஷயத்தை பாப்பீங்க – பிரெட் லீ ஓபன்டாக்

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்த விராட் கோலி பல சாதனைகளை முறியடித்ததோடு இன்னும் பல சாதனைகளை தொட்டு சிகரம் தொட முன்னேறி வரும் வேளையில் அவருக்கு இணையாக தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் உயர்ந்து வரும் பாபர் அசாம் அவரை ஆதரித்து பதிவிட்டதையும் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலி வெளியிட்ட இந்த பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement