டக் அவுட் ஆவதிலும் இப்படி ஒரு சாதனையா? சச்சினுக்கு அடுத்து விராட் கோலிதான் – டாப் 4 லிஸ்ட் இதோ

Joseph
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலில் நடந்த 2 போட்டிகளின் முடிவில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* என தொடரில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் துவங்கியது. இந்த கடைசி போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருந்தன.

prasidh 1

- Advertisement -

அதன்படி இப்போட்டியில் இந்திய அணியில் இருந்து கே எல் ராகுல், தீபக் ஹூடா, சஹால் ஆகியோருக்கு பதில் ஷிகர் தவான், தீபக் சஹர், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

விராட் கோலி டக் அவுட்:
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து சில ஓவர்களிலேயே மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானும் 10 ரன்களில் நடையை கட்ட 42/3 என்ற மோசமான தொடக்கத்தை இந்தியா பெற்றது. அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்த முயன்றார்கள்.

Kohli

நீண்ட நாட்கள் கழித்து மிடில் ஆர்டரில் அசத்திய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு மீட்டெடுத்த போது 54 பந்துகளில் அதிரடியாக 56 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் அவுட்டானார். ஷ்ரெயாஸ் ஐயர் 80 ரன்களில் அவுட்டானார். கடைசி நேரத்தில் தீபக் சஹர் 38 ரன்களும் வாசிங்டன் சுந்தர் 33 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 265 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

இந்தியா வைட்வாஷ் வெற்றி:
இதை தொடர்ந்து 266 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 2 போட்டிகளைப் போலவே மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியது. குறிப்பாக ஷை ஹோப் 5, ப்ரெண்டன் கிங் 14, டேரன் ப்ராவோ 19, ப்ரூக்ஸ் 0 என அந்த அணியின் டாப் 4 வீரர்களும் இந்தியாவின் அதிரடியான பந்துவீச்சில் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளை இழந்தார்கள். இதனால் 68/4 என ஆரம்பத்திலேயே சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் இறுதிவரை அதிலிருந்து மீள முடியாமல் 37.1 ஓவர்களில் 169 ரன்களை மட்டுமே எடுத்தது.

rohith

இதன் வாயிலாக 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி வைட்வாஷ் வெற்றியை பெற்றது. மறுபுறம் சிறப்பாக பந்து வீசிய போதிலும் மோசமான பேட்டிங் காரணமாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் வைட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

விராட் கோலி மோசமான சாதனை:
இந்த தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதல் முறையாக சாதாரண வீரராக விளையாடிய விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக இந்தத் தொடரில் சொதப்பிய விராட் கோலி 18, 8, 0 என மொத்தம் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2015க்கு பின் முதல் முறையாக ஒரு ஒருநாள் தொடரில் அரை சதத்தை அடிக்க முடியாமல் விராட் கோலி திண்டாடி உள்ளார்.

Kohli

ஆம் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 25, 23, 1 என ஒரு அரைசதம் கூட அடிக்காமல் 3 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 49 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். அதற்கு பின் தற்போது தான் 7 ஆண்டுகள் கழித்து ஒரு ஒருநாள் தொடரில் அரைசதம் அடிக்க முடியாமல் அவர் தடுமாறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இப்போட்டியில் டக் அவுட்டான அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான 4வது இந்திய பேட்டர் என்ற முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை முந்தி மோசமான சாதனையையும் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான இந்திய பேட்டர்களின் (1 – 7) பட்டியல் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர் : 20 டக் அவுட்
2. யுவராஜ் சிங் : 18 டக் அவுட்
3. சௌரவ் கங்குலி : 16 டக் அவுட்
4. விராட் கோலி : 15 டக் அவுட்
5. வீரேந்திர சேவாக்/ சுரேஷ் ரெய்னா : 14 டக் அவுட்

kohli

மேலும் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 3 பேட்டிங் இடத்தில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர் (11 முறை) என்ற மோசமான பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். இத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான 2வது வீரர் என்ற விரேந்தர் சேவாக்கை முந்தி விராட் கோலி மோசமான சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர் : 34 டக் அவுட்
2. விராட் கோலி : 32 டக் அவுட்
3. விரேந்தர் சேவாக் : 31 டக் அவுட்
4. சௌரவ் கங்குலி : 29 டக் அவுட்

Advertisement