அசாத்தியமான பேட்டிங் மூலம் ஐ.பி.எல் முதல் நபராக வரலாற்று சாதனையை பதிவு செய்த விராட் கோலி – விவரம் இதோ

நடப்பு ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷிவம் தூபே, ராகுல் திவேட்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது.

dube

பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்தது. இதன்மூலமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களும், தேவ்தத் படிக்கல் 101 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் பெங்களூர் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இப்போட்டியில் இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி. அவர் 47 பந்துகளில் 72 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார். இப்போட்டியில் விராட் கோலி 51 ரன்களை கடந்த போது ஐபிஎல் தொடரில் 6000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

kohli 1

ஐ.பி.எல் தொடரில் 6000 ரன்கள் என்ற இச்சாதனையை கோலி தனது 196வது ஐபிஎல் போட்டியில் படைத்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடிய விராட் கோலி, இதுவரை ஐபிஎல் தொடர்களில் 40 அரை சதங்கள் மற்றும் 5 சதங்களை அடித்து இருக்கிறார்.

- Advertisement -

padikkal

72 ரன்கள் எடுத்த விராட் கோலி இத்தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அரைசதம் அடித்த பின் அந்த அரை சதத்தை தனது மகளான வமிகாவிற்கு சமர்ப்பணம் செய்வதாக செய்கை காட்டினார்.