இந்திய அணி சார்பாக 9 ஆவது வீரராக இமாலய சாதனை பட்டியலில் இணைந்த கிங் கோலி – விவரம் இதோ

indvsaus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி அணி வெற்றி பெற்று விட்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி 389 ரன்கள் குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக 4 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். அபாரமாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் 64 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீரர் விராட் கோலி 89 ரன்கள், ராகுல் 76 ரன்கள் மட்டுமே எடுத்தனர். எந்த ஒரு வீரரும் இந்த போட்டியில் வெற்றிபெறும் அளவுக்கு ஆடவில்லை.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் 87 பந்துகளில் 89 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறார் விராட் கோலி. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இவருக்கு இது 250 ஆவது ஒருநாள் போட்டியாகும்.

kohli

இதற்கு முன்னர் இந்திய அணியின் சார்பில் 8 வீரர்கள் 250 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் ஆடி
இருக்கின்றனர். இந்த மைல்கல்லை எட்டிய 9வது வீரராக விராட்கோலி இணைந்திருக்கிறார். இவருக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அசாருதீன், அனில் கும்ப்ளே, சேவாக், யுவராஜ் சிங், தோனி ஆகியோர் 250 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli

அதுமட்டுமின்றி இன்று கோலி அடித்த 89 ரன்கள் மூலம் மற்றொரு புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 22000 ரன்களை குவித்த வீரராக சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement