லெஜெண்டாக வளர்ந்தாலும் பணிவு மாறாத கிங் கோலி.. இளம் டெல்லி பவுலருக்கு ஸ்பெஷல் பரிசு

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். அதனால் ரஞ்சிக் கோப்பையில் 12 வருடங்கள் கழித்து அவர் விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ரயில்வேஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணிக்காக அவர் விளையாடுவதைப் பார்க்க 15,000 மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்து வந்தார்கள்.

அவர்கள் கோலி கோலி, கோலிக்கு பவுலிங் கொடுங்கள் என்று விதவிதமாக கூச்சலிட்டு தங்களுடைய ஹீரோவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதே போல சில ரசிகர்கள் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு விராட் கோலியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். அவர்களை அடித்து பிடிக்க வந்த பாதுகாவலர்களிடம் மெதுவாக அழைத்துச் செல்லுமாறு விராட் கோலி அன்பைக் காட்டினார்.

- Advertisement -

மாறாத கோலி:

இருப்பினும் அவ்வளவு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்டிங் செய்த விராட் கோலி 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். அவர் அவுட்டானதும் மைதானத்தில் இருந்த பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள். மேலும் அவரை அவுட்டாக்கிய ரயில்வேஸ் அணியின் பவுலர் ஹிமான்சு சங்வானை சமூக வலைதளங்களில் விராட் கோலி ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள்.

இறுதியில் அந்தப் போட்டியில் ரயில்வேஸ் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்தப் போட்டியின் முடிவில் தங்களுடைய மாநிலத்திலிருந்து இந்தியாவுக்கு சென்று 26000+ ரன்கள் 81 சதங்கள் அடித்து ஜாம்பவானாக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலிக்கு டெல்லி வாரியத்தின் சார்பில் ஸ்பெஷல் நினைவு பரிசு கொடுக்கப்பட்டது. அதை வாங்கச் சென்ற விராட் கோலி அருகில் நின்ற தன்னுடைய பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்.

- Advertisement -

ஸ்பெஷல் பரிசு:

இவ்வளவு பெரிய ஜாம்பவானாக வளர்ந்தும் பழையவற்றை மறக்காத அவர் பயிற்சியாளரின் காலில் விழுந்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் அந்தப் பரிசை வாங்கிக் கொண்ட விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடும் சக வீரர்களுடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். அத்துடன் மைதானத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்களுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதையும் படிங்க: இது ஐபிஎல் கிடையாது.. இங்கிலாந்து சொல்ற மாதிரி இந்தியா அவரை செலக்ட் பண்ணிருக்கலாம்.. அஸ்வின் கருத்து

அது போக தம்முடைய 12 வருட ரஞ்சிக்கோப்பை கம்பேக்கில் 5 விக்கெட்டுகள் எடுத்து டெல்லியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சிவம் சர்மாவுக்கு பந்தில் கையெழுத்திட்டு விராட் கோலி ஸ்பெஷல் பரிசையும் வழங்கினார். இது பற்றி சிவம் சர்மா இன்ஸ்டாகிராமில். “இந்த 5 விக்கெட் ஹால் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். லெஜெண்ட் விராட் பைய்யா பந்தில் கையெழுத்திட்டது இன்னும் ஸ்பெஷல். கடவுள் சிறந்தவர் அன்புடையவர்” என்று கூறியுள்ளார்.

Advertisement