இது ஐபிஎல் கிடையாது.. இங்கிலாந்து சொல்ற மாதிரி இந்தியா அவரை செலக்ட் பண்ணிருக்கலாம்.. அஸ்வின் கருத்து

R Ashwin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா அந்தத் தொடரின் கோப்பையை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. முன்னதாக புனே நகரில் நடைபெற்ற அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை இந்தியா களமிறக்கியது சர்ச்சையை உண்டாக்கியது.

குறிப்பாக அந்தப் போட்டியில் கடைசி ஓவரின் தலையில் பவுன்சர் பந்தில் அடிவாங்கிய சிவம் துபேவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட் விதிமுறைப்படி ராணாவை இந்தியா விளையாட வைத்தது. ஆனால் விதிமுறைப்படி ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதில் முழு நேர பவுலரான ராணாவை இந்தியா தேர்ந்தெடுத்தது சரியான முடிவு அல்ல என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்தார்.

- Advertisement -

இந்தியாவின் தவறு:

மேலும் துபேவுக்கு பதில் ராணா சரியான மாற்று வீரர் இல்லை என்று கெவின் பீட்டர்சன், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் விமர்சித்தார்கள். இந்நிலையில் இங்கிலாந்தினர் சொல்வது போல் துபேவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ரமந்தீப் சிங் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அப்போட்டியில் இந்திய அணியின் தவறை சுட்டிக்காட்டிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அந்தப் போட்டி முடிந்து விட்டது. இந்தியா சொந்த மண்ணில் மற்றுமொரு தொடரை வென்றது. ஆனால் அந்தப் போட்டி ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரருடன் விளையாடியது போல் இருந்தது. துபேவுக்கு பதிலாக ராணா தேர்ந்தெடுக்கப்பட்டது மொத்தமாக விவாதத்தை எழுப்பியது. இங்கே நாம் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறோமோ அல்லது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறோமோ என்பதை மறந்து விட்டோமோ?”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“கடந்த காலங்களில் ஜடேஜாவுக்கு பதில் கான்பெரா மைதானத்தில் சப்ஸ்டிடியூட் வீரராக சஹால் வந்தார். அப்போது ஸ்பின்னருக்கு பதில் ஸ்பின்னர் விளையாட வந்தார். இங்கே துபேவுக்கு பதில் ராணா விளையாடினார். ஒருவேளை துபேவுக்கு பதில் சரியான மாற்று வீரர் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். அது போன்ற சூழ்நிலையில் ரமந்தீப் சிங் வெளியே உட்கார்ந்திருந்தார்”

இதையும் படிங்க: ஜோக் பண்ணாம தரமான இந்தியாவை பாருங்க.. சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தான் அணியை விமர்சித்த வாசிம் அக்ரம்

“அதை செய்யாதது என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே அது ஒன்று அம்பயர்கள் அல்லது போட்டி நடுவர்களிடம் ஏற்பட்ட தவறான புரிதலாகும். உண்மையில் துபேவுக்கு பதிலாக ரமந்தீப் சிங் சரியான மாற்று வீரர். ஆனால் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். பொறுப்பில் இருப்பவர்கள் இதை நன்றாக கவனித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement